ஆனால் இன்று வைபை நெட்வொர்க்-களை ஹேக் செய்யும் வல்லமை கொண்ட பல்வேறு மென்பொருட்களும் ஸ்மார்ட் போன்களுக்கான செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன. எமது தளத்தில் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் ஒன்றின் மூலம் குறிப்பிட்ட வைபை நெட்வொர்க் ஒன்றை ஹேக் செய்வது எப்படி என்பது பற்றிய பதிவொன்று எழுதப்பட்டு இருந்தது. அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
ஆன்ராயிடு போனில் இருந்து வைபை நெட்வொர்க்-ஐ ஹேக் செய்வது எப்படி?
இவ்வாறு கடவுச்சொற்கள் போடப்பட்டும் எமது வைபை நெட்வொர்க்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் எமது வைபை நெட்வொர்க்-ஐ யாரவது ஹேக் செய்து பயன்படுத்தி வருகின்றார்களா என்பதை கணனியில் இருந்தபடி தெரிந்து கொள்வது எப்படி என்பது பற்றி பதிவொன்றை எழுதி இருதேன். அந்த பதிவை கீழே வளங்கபட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து கொள்ள முடியும்.
வைபை நெட்வொர்க் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்று கணணி மூலம் தெரிந்து கொள்வது எப்படி?
இவ்வாறு எமது தனிப்பட்ட வை பை நெட்வொர்க்-ஐ மற்றவர்கள் எமக்கு தெரியாமல் பயன்படுத்துவதால் எமது இன்டர்நெட் வேகம் குறைவடைவதோடு, நாம் செலுத்தும் பணத்தில் யாரோ ஒருவர் இலவசமாக இன்டர்நெட் பயன்படுத்தும் சந்தர்ப்பம் ஏற்படும்.
ஆகவே இன்றைய பதிவில் எமது ஆன்ராயிடு மற்றும் ஐ போன்-இல் இருந்து எமது வைபை நெட்வொர்க் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்வது எப்படி என்று பார்ப்போம். மேலும் இந்த முறை மூலம் உங்களது வை பை நெட்வொர்க் ஹேக் செய்யப்பட்ட அடுத்த நொடியே உங்களால் தெரிந்து கொள்ளவும் முடியும்.
அதாவது எமது வைபை ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை குறித்த வை பை நெட்வொர்க்-இல் இணைந்து இருக்கும் டிவைஸ்-களின் MAC முகவரியை கொண்டு அறிவது எப்படி என்று பார்ப்போம்.
வைபை நெட்வொர்க் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்வது எப்படி?
முதலாவதாக கீலே தறப்பட்டிருக்கும் வைபை ஹேக் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடிக்க கூடிய செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து ஸ்கேன் என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது உங்களது வைபை நெட்வொர்க்-இல் இணைந்து இருக்கும் அனைத்து டிவைஸ்-களும் பட்டியலிடப்பட்டு காட்டப்படும்.
அதிலே காட்டபப்டும் முகவரியையும் டிவைஸ் பெயரையும் வைத்து உங்களது வை பை நெட்வொர்க்-இல் ஏதேனும் தெரியாத டிவைஸ் ஒன்று இணைந்து இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
ஆகவே மிக இலகுவாக ஸ்மார்ட் போன் மூலம் வைபை நெட்வொர்க் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டு பிடிக்க உதவும் செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று உங்களது ஆன்ராயிடு அல்லது ஐ போனுக்கு பெற்று கொள்ளுங்கள்.
ஆன்ராயிடு செயலி
ஐபோன் செயலி
இந்த முறை மூலம் ஸ்கேன் செய்யப்பட்ட பின்னர், உங்களது வை பை நெட்வொர்க்-இல் ஏதேனும் தெரியாத டிவைஸ்-கள் இணைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக உங்களது வை பை நெட்வொர்க் கடவுச்சொல்லை மாற்றுவது சிறந்ததாகும்.


