WhatsApp Message-களை Google Drive-ற்கு Backup எடுப்பது எப்படி?

ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் குறுஞ்செய்தி பாவனை அதாவது SMS ஆனது நாளுகுக்கு நாள் குறைவடைந்து கொண்டே வருகிறது. உங்களது நண்பர் மற்றும் உறவினர்களுக்கு ஏதாவது தகவல் ஒன்றை அனுப்ப வேண்டுமென்றால் உடனே நம் விரல்கலானது நமது ஸ்மார்ட் போனில் இருக்கும் WhatsApp-ஐயே தேடிச்செல்கிறது. இந்த அளவுக்கு WhatsApp ஆனது நம் அனைவர் மத்தியிலும் பிரபல்யமடைந்து காணப்படுகிறது.

இவ்வாறு நாம் WhatsApp-இல் அனுப்பும் செய்திகள் மற்றும் தகவல்களானது நமது ஸ்மார்ட் போனிலேயே சேமித்து வைக்கப்பட்டிருக்கும். நாம் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கும் போது அல்லது எமது ஸ்மார்ட் போனின் சிம் இலக்கத்தை மாற்றும் போது அல்லது வைரஸ் தாக்குதலின் காரணமாக நமது ஸ்மார்ட் போனில் சேமித்த வைக்கப்பட்டிருக்கும் WhatsApp மெசேஜ்களை இழக்க வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகலாம்.


இதனால்  இவ்வாறான ஒரு இக்கட்டான சூழ்நிலை வருமுன்னரே எம்முடைய அனைத்து WhatsApp மெசேஜ்களையும் எப்படி Backup எடுத்து வைத்து கொள்வது என்று பார்ப்போம்.

பரிந்துரைக்கப்படும் பதிவு


எம்முடைய WhatsApp மெசேஜ்களை பல வழிகளில் பாக்குப் எடுத்து வைத்து கொள்ளலாம். ஆனால் இன்றைய பதிவில் மிகவும் சிறந்த மற்றும் பாதுகாப்பான ஒரு Backup முறையை உங்களுக்கு கூறுகிறேன்.

WhatsApp மெசேஜ்களை எப்படி Google Drive-இல் Backup எடுத்து வைப்பது?

ஆம். WhatsApp மெசேஜ்களை நேரடியாக எமது கூகுள் டிரைவ்இற்கு Backup எடுத்துக்கொள்ள முடியும். இந்த முறையானது மிகவும் இலகுவானதும் பாதுகாப்பானதும் கூட.

உங்கள் WhatsApp மெசேஜ்கள் கூகுள் டிரைவ்-இல் இருக்கும் பட்ச்சத்தில் நீங்கள் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கினாலோ இல்லது உங்களது WhatsApp மெசேஜ்கள் எதோ ஒரு காரணத்தினால் அழிந்து போனாலோ மிக இலகுவாக Restore செய்து கொள்ள கூடியதாய் இருக்கும்.

எப்படி என்று விளக்கமாக கூறுகிறேன்.

முதலாவதாக உங்களது WhatsApp-ஐ அப்டேட் செய்திடுங்கள். ஏனென்றால் இந்த கூகுள் டிரைவ் Backup முறையானது புதிய WhatsApp பதிப்புக்களுடனேயே எந்த வித பிரச்சினையும் இன்று வேலை செய்யும்.


அடுத்து உங்களது WhatsApp-ஐ திறந்து கீழே குறிப்பிட்டுள்ள இடத்தை சென்றடையுங்கள்.

Menu Button > Settings > Chats and calls > Chat backup.


அங்கே Google Drive Settings என்று இருப்பதில் Backup to Google Drive என்பதை தெரிவு செய்யுங்கள்.

அடுத்து தோன்றும் திரையில் எவ்வளவு நாள் இடைவேளையில் உங்களது WhatsApp மெசேஜ்கள் Backup எடுக்கப்பட வேண்டும் என்பதை தெரிவு செய்யுங்கள்.


அடுத்து தோன்றும் திரையில் உங்களுடைய எந்த கூகுள் கணக்கில் WhatsApp மெசேஜ்கள் Backup எடுக்கப்பட வேண்டும் என்பதை தெரிவு செய்யுங்கள்.

அவ்வளவு தான். இப்போது உங்களது WhatsApp மெசேஜ்கள் நீங்கள் வழங்கிய கட்டளைப்படி முறையே உங்களது கூகுள் டிரைவ்இற்கு Backup எடுக்கப்படும்.

இந்த முறையில் உங்கள் WhatsApp மெசேஜ்களை கூகுள் டிரைவ்-இல் Backup எடுத்து வைத்து கொள்ளும் போது, உங்களுக்கு தேவையான நேரத்தில் தேவையான Device-க்கு அனைத்து மெசேஜ்களையும் Restore செய்ய கூடியதாய் இருக்கும்.