கையடக்க தொலைபேசி பாவிக்கும் அனைவருக்குமே இருக்கும் பொதுவான ஒரு பிரச்சினை தான், தெரியாத இலக்கங்களிலிருந்து அழைப்புக்கள் வருவது. இவ்வாறன அழைப்புக்கள் பல நேரம் எமக்கு தொல்லைகளாகவே காணப்படுகிறது.
இவ்வாறு தெரியாத இலக்கங்களில் இருந்து அழைப்புக்கள் வரும் போது நாம் யாருடைய இலக்கம் இது என்று யோசித்து பார்ப்பது வழக்கம். யோசிக்க முடிந்தாலும் எம்மால் இந்த இலக்கங்கள் யாருடையது, எந்த இடத்தில் இருந்து இந்த அழைப்பு மேட்கொள்ளப்படுகிறது என்பதெல்லாம் எம்மால் கணித்து கொள்ள முடியாது.
இதானால் இன்றைய பதிவில் இவ்வாறு உங்களது கையடக்க தொலைபேசிக்கு வரும் அழைப்புக்களில் தெரியாத இலக்கங்களில் இருந்து வரும் அழைப்பு யாருடையது? எந்த இடத்தில் இருந்து அழைப்பு மேட்கொள்ளப்பட்டுளது என்ற தகவல்களை எப்படி தெரிந்து கொள்வது என்று கூறுகிறேன்.
பரிந்துரைக்கப்படும் பதிவு
உங்களுக்கு வரும் அழைப்புக்களில் தெரியாத இலக்கத்தில் இருந்து வரும் அழைப்பு இந்தியாவிற்கு உட்பட்ட இலக்கம் என்றால் பின்வரும் முறைகள் மூலம் உங்களுக்கு வரும் அழைப்பு யாருடையது என்று இலகுவாக கண்டு பிடித்து விடலாம்.
இந்த வேலையை இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது சில Online தொலைபேசி இலக்க Tracing தளங்கள்.
ஆனால் நீங்கள் கூகுளின் சென்று தேடிப்பார்த்தால், அங்கே பல தளங்கள் தொலைபேசி இலக்கத்தை Trace செய்யலாம் என்ற விளக்கத்துடன் காணப்படும். ஆனால் இவற்றில் பல தளங்கள் அவை கூறிய வாக்குறுதிப்படி சரியாக தொலைபேசி இலக்கம் யாருடையது என்று கணிப்பதில்லை.
இதனால் தெரியாத இலக்கம் ஒன்றில் இருந்து அழைப்பொன்று வந்தால் அந்த இலக்கம் யாருடையது, எந்த இடத்தில் இருந்து வருகிறது என்பதையெல்லாம் சரியாக கணித்து கூறக்கூடிய சில நம்பிக்கையான Online தளங்களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
Bharatiya Mobile
Bmobile
Mobile Tracker
India Trace
Mobile Number Tracker
Find and Trace
உங்களுக்கு வரும் அழைப்பானது ஒரு BSNL லேன்ட் லைன் இலக்கமேன்றால் கீழ்காணும் BSNL டிரெக்டரி மூலம் சரியாக தேடிக்கொள்ளலாம்.
BSNL Directory
ஆகவே உங்களுக்கு தெரியாத இலக்கமொன்றில் இருந்து அழைப்புக்கள் வந்தால் அந்த குறிப்பிட்ட இலக்கத்தை குறித்து வைத்து கொண்டு, அந்த இலக்கத்தை நான் மேலே குறிப்பிட்ட Online தொலைபேசி இலக்க Tracing தளங்களில் சென்று தேடிப்பார்த்தால், உங்களை தெரியாத இலக்கத்தில் இருந்து அழைத்தவர் யார் என்று கண்டு பிடித்து விடலாம்.
குறிப்பு
இந்த தாளங்கலானது 100% சரியான தகவலை வழங்கா விட்டாலும் இன்டர்நெட்டில் காணப்படும் மற்றைய தளங்களை விட மிக சரியான தகவலையே வழங்கும். இருந்த போதிலும் சில Privacy காரணமாக ஒரு சில இலக்கங்களை சரியாக Trace செய்ய முடியாமல் போகலாம் என்பதை கருத்திட்கொள்ளுங்கள்.
Tech in Tamil
Tips and Tricks
உங்களது போனிற்கு தெரியாத இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புக்களை எப்படி Trace செய்வது?
