செல்பி-களை நாம் எமது ஸ்மார்ட் போனில் எடுக்கும் போது பொதுவாக அனைவருமே எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை தான், சரியாக புகைப்படங்களை கிளிக் செய்ய முடியாமல் போவது. இதற்கு காரணம் ஒரே கையால் ஸ்மார்ட் போனையும் பிடித்து கொண்டு போடோவையும் கிளிக் செய்ய முயற்ச்சிப்பது.
ஆகவே இன்றைய பதிவில் செல்பி பிரியர்களுக்கான ஒரு அருமையான செயலியை அறிமுகப்படுத்துகிறேன்.
இனி ஒரே கையில் ஸ்மார்ட் போனையும் பிடித்துக்கொண்டு போடோவையும் கிளிக் செய்ய தடுமாறிக்கொண்டு இருக்க தேவையில்லை. சிறியதா ஒரு விசில் அடித்தால் செல்பி எடுத்து விடலாம்.
எப்படி என்று கேட்கிறீர்களா? இந்த வேலையை மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது Whistle Camera செயலி.
கீழே நான் வழங்கி இருக்கும் லின்க்கின் மூலம் இந்த Whistle Camera-யை உங்களது ஸ்மார்ட் போனிற்கு தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.
Whistle Camera - Android
Whistle Camera - iPhone
தரவிறக்கிய செயலியை உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவுங்கள்.
அடுத்ததாக உங்களது மொழியை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
Picture செட்டிங்க்ஸ் சென்று அங்கே உங்களது போடோவுக்கு தேவையான தரத்தை தெரிவு செய்யுங்கள்.
Whistle Detector Sensitivity என்று இருப்பதை Level 1(High) என்பதில் வையுங்கள்.
குறைந்த Level-ல் இருக்கும் போது சரியாக விசில் அடிக்க தெரியாதவர்களுக்கு பொருத்தமானதாக இருக்கும்.
இப்போது உங்களது Selfie-க்கான நிலையை சரியாக தேர்ந்து எடுத்த பின், ஒரு சிறிய விசில் ஒன்று அடித்தால் போதும். உங்கள் செல்பி தயார்...!



