இப்படி அனைத்து ஸ்மார்ட் போன் பாவனையாளர்களாலும் கவர்திளுக்கப்பட்ட இந்த இரண்டு செயலிகளை பற்றியது தான் இன்றைய பதிவு.
வாட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய இரண்டு செயலிகளும் ஸ்மார்ட் போன்கள் மத்தியில் மெசேஜ்-களை பகிர்ந்து கொள்வதற்கான சிறப்பு செயலிகளாக பார்க்கப்பட்டு வருகிறது. இவை இரண்டும் தமது பயனர்களுக்கு பல்வேறுபட்ட வசதிகளை அறிமுகப்படுத்தி பல மில்லியன் கணக்கான பாவனையாளர்களை திருப்திப்படுத்தி வருகிறது.
இந்த இரண்டு செயளிகலுமே கிட்டத்தட்ட பொதுவான வசதிகளையே தமது பாவனையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. உதாரணமாக குழுக்களுக்கிடையேயான மெசேஜ் வசதி, வாய்ஸ் அழைப்பு வசதி, தனிநபர் மெசேஜ் வசதி என்று பல்வேறு வசதிகளை வழங்குகிறது.
வாட்ஸ்அப் மற்றும் வைபர் இந்த 2 செயளிகளிலுமே நாம் அவதானிக்க கூடிய ஒரு குறிப்பிட்ட விடயம் தான், யாரேனும் வாட்ஸ்அப் அல்லது வைபர் மூலமாக ஒரு புகைப்படம் அல்லது வீடியோ ஒன்றை அனுப்பினால் அது எமக்கு தெரியாமலேயே எமது ஸ்மார்ட் போனில் தரவிறக்கப்பட்டு Gallery-யில் சேமிக்கப்பட்டிருக்கும்.
இதனால் எமக்கு இரண்டு வகையான பாதிப்புக்கள் ஏற்படுகின்றது.
- எமது டேட்டா வீணடிக்கப்படுவது.
- தேவையில்லாத போட்டோ மற்றும் வீடியோகள் எமது Gellary-யில் வந்து சேர்வது.
வாட்ஸ்அப்-ல் மீடியா File தானாக டவுன்லோட் ஆக்குவதை தடுப்பது எப்படி?
உங்கள் வாட்ஸ்அப்-ஐ திறந்து செட்டிங்-இற்கு செல்லுங்கள்.
அடுத்து Chat and Calls என்பதை கிளிக் செய்யுங்கள்.
அங்கே Media Auto Download என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது இந்த செட்டிங்க்ஸ்-ஐ உபயோகித்து உங்கள் தேவைக்கு ஏற்ப மீடியா டவுன்லோட் ஆகுவதை கட்டுபடுத்த முடியும்.
வைபர்-ல் மீடியா File தானாக டவுன்லோட் ஆக்குவதை தடுப்பது எப்படி?
உங்கள் வைபர்-ஐ திறந்து செட்டிங்-இற்கு செல்லுங்கள்.
அங்கே Media என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது செட்டிங்-ல் உங்கள் தேவைக்கு ஏற்ப வைபர்-ல் வரும் மீடியா டவுன்லோட் ஆகுவதை கட்டுபடுத்த முடியும்.
இந்த முக்கியமான செட்டிங்-ஐ எம்மில் பலபேர் செயற்படுத்த தவறி இருக்கலாம். அதனாலேயே இந்த பதிவை இன்று எழுதலாம் என்று நினைத்தேன். இந்த செட்டிங்-களை செய்து கொள்வதன் மூலம் உங்களது டேட்டா வீணடிக்கப்படுவதையும் அதே போல் Gallery-யில் தேவையில்லாத போட்டோ மற்றும் வீடியோ-கள் தோன்றுவதையும் தவிர்க்க முடியும்.





