இதனாலேயே நாளுக்கு நாள் அன்றொஇட் பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இவ்வாறு பல மில்லியன் பாவனையாளர்களை கொண்ட இந்த அன்றொஇட் ஸ்மார்ட் போன்களில் நாம் அடிக்கடி கேள்விப்படும் ஒரு வார்த்தை தான் அன்றொஇட் ரூட்டிங். நாம் Play Store-ல் ஏதேனும் ஒரு செயலியை தரவிறக்க முற்பட்டால், சில வேலை குறிப்பிட்ட செயலியானது, உங்களது ஸ்மார்ட் போன் ரூட் செய்யப்பட்டிருந்தால் தான் வேலை செய்யும் என்று கூறுவதை பார்த்து இருப்பீர்கள்.
அது என்ன அன்றொஇட் ரூட்டிங்? சரி வாருங்கள். கீழே விளக்கமாக பார்ப்போம்.
அன்றொஇட் ரூட்டிங் என்றால் என்ன?
அன்றொஇட் ரூட்டிங் என்றால், உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனிட்கான Super User Access-ஐ வழங்குவதாகும்.அதாவது சாதாரண நிலையில் இருக்கும் உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனை ரூட் செய்வதன் மூலம், பல்வேறுவகையான வசதிகளை செய்து கொள்ள முடியும். உங்களது அன்றொஇட் போனிற்கு எதுவெல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி இருந்தீர்களோ, அவற்றில் பெரும்பாலான சேவைகளை பெற்று கொள்ள கூடியதாய் இருக்கும். உதாரணமாக Custom Software (ROM’s) வசதி, Custom Themes, வேகமான செயல்பாடு, அதிகரிக்கும் பேட்டரி நீடிப்பு, OS Upgrade என்று மேலும் பல்வேறு வசதிகளை செய்து கொள்ள முடியும்.
எளிதாக சொல்ல வேண்டும் என்றால் உங்கள் போனை நீங்கள் ஹாக் செய்து விட்டீர்கள் என்று தான் அர்த்தம்.
பரிந்துரைக்கப்படும் பதிவு
ரூட்டிங் -ன் நன்மைகள் என்ன ?
Custom Software (ROM’s)ROM ஆனது அன்றொஇட் போனை இயக்க உதவும் ஒரு சேவை ஆகும். உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் Default ஆக இருக்கும் ROM -ஐ மாற்றும் வசதி சாதாரண போன்களில் கிடையாது. ஆனால் உங்களது அன்றொஇட் போனை ரூட் செய்வதன் மூலம் Custom ROM வசதியை மேம்படுத்தி கொள்ளும் வசதி கிடைக்கும். இதன் மூலம் அன்றொஇட் OS Upgrade வசதியை நமக்கு பெற்று கொள்ள முடியும்.
Custom Themes
அன்றொஇட் ஸ்மார்ட் போனுக்கு ஏற்கனவே Default ஆக உள்ள தீம் இல்லாமல் உங்கள் தேவைக்கேற்ப தீம்-ஐ மாற்றும் வசதியை பெற்று கொள்ள முடியும்.
போனின் வேகம் மற்றும் பேட்டரி பயன்பாடு அதிகரிக்கும்.
ரூட் செய்து கொள்வதன் மூலம் உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனின் வேகத்தை அதிகரித்து கொள்ள முடியும். அதே போல் உங்களது பேட்டரி பாவனை நேரத்திலும் முன்னேற்றம் தெரியும்.
இவைகள் தவிர WiFi and USB tethering மற்றும் Simple Backup Solution போன்ற உபயோகமுள்ள வசதிகளை பெற்று கொள்ள கூடியதாய் இருக்கும்.
ரூட் செய்வதன் தீமைகள் என்ன?
உங்களது அன்றொஇட் போனை ரூட் செய்வதால் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சினை தான், உங்களது ஸ்மார்ட் போனிட்கான வாரண்டி கிளைம் செய்ய முடியாமல் போவது.
அடுத்து சில அன்றொஇட் ஸ்மார்ட் போன்களில் ரூட் செய்வதனால் ஒரு சில செயலிகள் இயங்க மறுக்கலாம். இந்த பிரச்சினை ஏற்படுவது மிகவும் அரிது. இருந்த போதிலும் ரூட் செய்ய முன்னர் நீங்கள் இதை பற்றி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே கூறுகிறேன்.
அன்றொஇட் மார்க்கெட் செயலிகள் அல்லாத செயலிகள் ஸ்மார்ட் போனில் நிறுவ முடியும் என்பதால், இணைத்தின் மூலம் வைரஸ் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. இதை நீங்கள் தவிர்க்க வேண்டுமானால் சிறந்த ஒரு வைரஸ் காப்பு செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் நிறுவி இருத்தல் வேண்டும்.
குறிப்பு
என்னை பொறுத்த வரை ரூட் செய்வதால் பெரிதாக பிரச்சினை ஏதும் வருவதாக தெரியவில்லை. ஏனெனில் நானும் என்னுடைய அன்றொஇட் ஸ்மார்ட் போனை ரூட் செய்து தான் உபயோகித்து வருகிறேன். இது வரை எந்த பிரச்சினையும் இல்லை. இருந்த போதிலும், உங்களது ஸ்மார்ட் போனின் பாதுகாப்பு உங்கள் கைகளில் தான்.
ஆகவே உங்களது ஸ்மார்ட் போனை ரூட் செய்ய வேண்டும் என்று நினைத்தால் கீழ் உள்ள லின்க்கை கிளிக் செய்து, உங்கள் ஸ்மார்ட் போனில் இருந்த படியே ஐந்தே நிமிடத்தில் அன்றொஇட் போனை ரூட் செய்வது எவ்வாறு என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Android போனை 5 நிமிடத்திற்குள் ரூட் செய்வது எப்படி?
Android போனை 5 நிமிடத்திற்குள் ரூட் செய்வது எப்படி?
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பேஸ்புக் அல்லது மற்றைய சமூக வலைத்தளங்கள் ஊடக பகிர்ந்து கொள்ளுங்கள்.
