ரூட் செய்வதன் நன்மைகளும் தீமைகளும்..
பல வாசகர்கள் கேட்டு கொண்டதட்கினங்க இன்று அன்றொஇட் ரூட்டிங் பற்றி எழுதாலாம் என்று எண்ணியுள்ளேன். நீங்கள் உங்களது அன்றொஇட் போனை ரூட் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இதற்கான வழியை, நண்பன் கூகுளில் தேடிப்பார்த்தால், பல்வேறு செயன்முறைகளை செய்து தான் ரூட் செய்ய வேண்டும், கணணி இருக்க வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்டிருக்கும்.
அப்படியெல்லாம் இல்லாமல் ஐந்தே நிமிடத்தில் உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் மூலமாகவே மிக இலகுவாக ரூட் செய்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனை ரூட் செய்ய தேவையானவை
- உங்களது ஸ்மார்ட் போன் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
- பேட்டரி சார்ஜ் ஆனது 50%-இற்கு அதிகமாக இருக்க வேண்டும்.
- இன்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும்.
குறிப்பு
என்னை பொறுத்த வரை ரூட் செய்வதால் பெரிதாக பிரச்சினை ஏதும் வருவதாக தெரியவில்லை. ஏனெனில் நானும் என்னுடைய அன்றொஇட் ஸ்மார்ட் போனை ரூட் செய்து தான் உபயோகித்து வருகிறேன். இது வரை எந்த பிரச்சினையும் இல்லை. இருந்த போதிலும், உங்களது ஸ்மார்ட் போனின் பாதுகாப்பு உங்கள் கைகளில் தான்.
முதலாவதாக கீழேவ்வழங்கப்பட்டு இருக்கும் ரூட் செய்வதற்கான 'அன்றொஇட் ரூட்' செயலியை உங்களது ஸ்மார்ட் போனிற்கு பெற்று கொள்ளுங்கள்.
அடுத்து உங்களது போனில் செட்டிங்-இற்கு சென்று Security என்பதை கிளிக் செய்யுங்கள்.
அங்கே Unknown Sources என்று இருப்பதில் டிக்-ஐ செயட்படுத்துங்கள்.
அடுத்து தரவிறக்கிய ரூட் செய்வதற்கான செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் நிறுவுங்கள்.
நிறுவப்பட்ட செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் ஆரம்பியுங்கள்.
பரிந்துரைக்கப்படும் பதிவு
Android Phone-ல் SD Card-ஐ RAM ஆக மாற்றுவது எப்படி?
அதிலே One Click Root என்பதை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான் இப்போது உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போன் ஆனது ரூட் ஆக தயாராகிவிடும்.
ரூட் செய்வதற்கான செயலியை இங்கே கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளுங்கள்.
குறிப்பு - ரூட் செயன்முறை முடியும் வரை உங்களது ஸ்மார்ட் போனில் Display வெளிச்சம் Off ஆகாமல் பார்த்து கொள்ளுங்கள். இல்லையேல் இன்டர்நெட் இணைப்பு தடைப்பட்டு ரூட் செயன்முறை பாதியிலேயே நின்று விட வாய்ப்பு உண்டு.
அவ்வளவு தான். இப்போது உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போன் ஆனது, கிட்டத்தட்ட ஐந்து நிமிடத்திற்குள் ரூட் செய்யப்பட்டு விடும்.
உங்களது ஸ்மார்ட் போனில் ரூட் சரியாக செய்யப்பட்டு விட்ட பின்னர் ரூட் Succeed என்ற ஒரு வாசகம் தோன்றும்.
ரூட் செய்வதற்கான செயலியை பெற்றுக்கொள்வதில் ஏதேனும் பிரச்சினை இருந்தாலோ அல்லது ரூட் செய்யும் செய்முறை பற்றிய கேள்விகள் இருந்தாலோ எமது பேஸ்புக் பேஜ்-க்கு மெசேஜ் அனுப்பி ரூட் செய்யும் செயலியையும் விளக்கங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.
எமது பேஸ்புக் பேஜ்-ஐ தொடர்பு கொள்ளும் வசதி மேலே தரப்பட்டுள்ளது. எமது பதிவுகள் பிடித்திருந்தால் உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ளுங்கள்.


