கூகுளின் அதிவேக DNS மூலம் கணணியின் இன்டர்நெட் வேகத்தை இலவசமாக அதிகரிப்பது எப்படி?

இந்த பதிவில் உங்களது கணணி மூலம் அல்லது மடிக்கணணி மூலம் இணையத்துடன் இணையும் போது இணைய வேகத்தை கொஞ்சம்  அதிகரித்து கொள்வது எப்படி என்று கூறுகிறேன். சாதாரணமாக நீங்கள் கூகுளில் சென்று இணையத்தை வேகப்படுத்த கூடிய மென்பொருட்களை தேடிப்பார்த்தால் நூற்றுக்கனனக்கான மென்பொருட்கள் காணப்படும்.

ஆனால் இதில் எத்தனை மென்பொருட்கள் தங்களது வேலையை சரியாக செய்து முடிக்கிறது? இதனால் இன்று எந்த விதமான மென்பொருட்களின் இதவியும் இன்றி எப்படி உங்களது கணனியில் இணைய வேகத்தை அதிகரித்து கொள்வது என்று கூறுகிறேன்.

உங்களது கணணி குறிப்பிட்ட ஒரு இணைய இணைப்பு  ஒன்றுடன் இணைந்து இருக்கும் போது சாதாரண DNS-கு பதிலாக Google-லின் மிக வேகமாக இயங்க கூடிய DNS-ஐ உபயோகிக்கும் பட்ச்சத்தில் உங்களது இணைய வேகமானது எந்த வித மென்பொருளும் இன்றி இன்னும் அதிகரிக்கப்படும்.


நீங்கள் குறிப்பிட்ட ஒரு இன்டர்நெட் நெட்வொர்க் உடன் இணையும் போது, உங்களது கணணி ஆனது, அந்த குறிப்பிட்ட நெட்வொர்க் உடைய DNS-ஐயே பெற்றுக்கொள்ளும். அனால் இதை நீங்கள் மாற்றி, Google-இன் அதிவேக DNS-ஐ உபயோகிக்கும் போது உங்கள் இணைய வேகமானது இருந்ததிலும் பார்க்க வேகமாக்கப்படும்.

கூகுளின் அதிவேக DNS-ஐ உபயோகித்து உங்களது கணனியின் இன்டர்நெட் வேகத்தை அதிகரிப்பது எப்படி?

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்னர் கூகுளின் அதிவேக DNS-ஐ பயன்படுத்தி உங்களது ஸ்மார்ட் போனின் இணைய வேகத்தை அதிகரிப்பது எப்படி என்று கூறியிருந்தேன். அந்த பதிவை நீங்கள் பார்க்க தவறியிருந்தால் கீழுள்ள லின்க்கின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


சரி இப்போது கணனியின் இணைய வேகத்தை எப்படி கூகுள் DNS மூலம் இலவசமாக அதிகரித்து கொள்வது என்று பார்ப்போம்.

உங்கள் கணனியில் Start-ஐ கிளிக் செய்யுங்கள்.
பின் Control Panel, அங்கே Network and Sharing Center என்பதில் கிளிக் செய்யுங்கள்.


அடுத்து Local Area Connection என்பதை கிளிக் செய்யுங்கள்.


என்னுடைய கணனியில் மேலே காட்டியிருக்கும் படத்தில் Connection 2 என்று காணப்படுகிறது. இது நான் எனது ஸ்மார்ட் போன் மூலம் கணணிக்கான இணைய இணைப்பை வழங்கி உள்ளதாலேயே இப்படி காட்டுகிறது.

நீங்கள் கணணியில் இணையத்தை Router மூலமாக பெற்றுக்கொள்ளும் பட்ச்சத்தில் Connection 2 என்று காட்டப்படமாட்டது என்பதை கருத்திட்கொள்ளுங்கள்.

அடுத்து Properties என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து  கீழே காட்டியிருப்பது போல் IPv4 என்பதை Double Click செய்யுங்கள்.


அடுத்ததாக Use Following DNS என்பதை தெரிவு செய்து நான் கீழே படத்தில் காட்டியுள்ளவாறு 
8.8.8.8
8.8.4.4 என்று வழங்கி OK என்பதை கிளிக் செய்யுங்கள்.


அவ்வளவு தான் நண்பர்களே. இப்போது நீங்கள் வெற்றிகரமாக உங்களது இணைய இணைப்பின் DNS முகவரியை கூக்குளின் அதிவேக DNS-க்கு மாற்றி விட்டீர்கள். இப்போது இணையத்தை உபயோகிக்கும் போது இணைய வேகமானது முன்னரிலும் பார்க்க அதிகமாக இருப்பது உங்களுக்கே புரியும்.