அன்றொஇட் ரூட் செய்வது எப்படி? அதன் நன்மை தீமைகள் என்ன?

ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் அன்றொஇட் ஸ்மார்ட் போன்களானது தனக்கென தனி இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. இதற்கு காரணம், நியாயமான விலையும், விலைக்கேற்ற சவதிகளும் தான். இன்று சிறிய விலைக்கு கிடைக்க கூடிய அன்றொஇட் போன்கள் கூட Skype, WhatsApp, தரமான கேமரா என்று பல்வேறு வசதிகளுடன் சந்தைக்கு வருகிறது.

இதனாலேயே நாளுக்கு நாள் அன்றொஇட் பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இவ்வாறு பல மில்லியன் பாவனையாளர்களை கொண்ட இந்த அன்றொஇட் ஸ்மார்ட் போன்களில் நாம் அடிக்கடி கேள்விப்படும் ஒரு வார்த்தை தான் அன்றொஇட் ரூட்டிங். நாம் Play Store-ல் ஏதேனும் ஒரு செயலியை தரவிறக்க முற்பட்டால், சில வேலை குறிப்பிட்ட செயலியானது, உங்களது ஸ்மார்ட் போன் ரூட் செய்யப்பட்டிருந்தால் தான் வேலை செய்யும் என்று கூறுவதை பார்த்து இருப்பீர்கள்.


அது என்ன அன்றொஇட் ரூட்டிங்? சரி வாருங்கள். கீழே விளக்கமாக பார்ப்போம்.

அன்றொஇட் ரூட்டிங் என்றால் என்ன?

அன்றொஇட் ரூட்டிங் என்றால், உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனிட்கான Super User Access-ஐ வழங்குவதாகும்.

அதாவது சாதாரண நிலையில் இருக்கும் உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனை ரூட் செய்வதன் மூலம், பல்வேறுவகையான வசதிகளை செய்து கொள்ள முடியும். உங்களது அன்றொஇட் போனிற்கு எதுவெல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி இருந்தீர்களோ, அவற்றில் பெரும்பாலான சேவைகளை பெற்று கொள்ள கூடியதாய் இருக்கும். உதாரணமாக Custom Software (ROM’s) வசதி, Custom Themes, வேகமான செயல்பாடு, அதிகரிக்கும் பேட்டரி நீடிப்பு, OS Upgrade என்று மேலும் பல்வேறு வசதிகளை செய்து கொள்ள முடியும்.

எளிதாக சொல்ல வேண்டும் என்றால் உங்கள் போனை நீங்கள் ஹாக் செய்து விட்டீர்கள் என்று தான் அர்த்தம்.

பரிந்துரைக்கப்படும் பதிவு


ரூட்டிங் -ன் நன்மைகள் என்ன ?

Custom Software (ROM’s)

ROM ஆனது அன்றொஇட் போனை இயக்க உதவும் ஒரு சேவை ஆகும். உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் Default ஆக இருக்கும் ROM -ஐ மாற்றும் வசதி சாதாரண போன்களில் கிடையாது. ஆனால் உங்களது அன்றொஇட் போனை ரூட் செய்வதன் மூலம் Custom ROM வசதியை மேம்படுத்தி கொள்ளும் வசதி கிடைக்கும். இதன் மூலம் அன்றொஇட் OS Upgrade வசதியை நமக்கு பெற்று கொள்ள முடியும்.

Custom Themes

அன்றொஇட் ஸ்மார்ட் போனுக்கு ஏற்கனவே Default ஆக உள்ள தீம் இல்லாமல் உங்கள் தேவைக்கேற்ப தீம்-ஐ மாற்றும் வசதியை பெற்று கொள்ள முடியும்.

போனின் வேகம் மற்றும் பேட்டரி பயன்பாடு அதிகரிக்கும்.

ரூட் செய்து கொள்வதன் மூலம் உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனின் வேகத்தை அதிகரித்து கொள்ள முடியும். அதே போல் உங்களது பேட்டரி பாவனை நேரத்திலும் முன்னேற்றம் தெரியும்.

இவைகள் தவிர WiFi and USB tethering மற்றும் Simple Backup Solution போன்ற உபயோகமுள்ள  வசதிகளை பெற்று கொள்ள கூடியதாய் இருக்கும்.


ரூட் செய்வதன் தீமைகள் என்ன?

உங்களது அன்றொஇட் போனை ரூட் செய்வதால் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சினை தான், உங்களது ஸ்மார்ட் போனிட்கான வாரண்டி கிளைம் செய்ய முடியாமல் போவது.

அடுத்து சில அன்றொஇட் ஸ்மார்ட் போன்களில் ரூட் செய்வதனால் ஒரு சில செயலிகள் இயங்க மறுக்கலாம். இந்த பிரச்சினை ஏற்படுவது மிகவும் அரிது. இருந்த போதிலும் ரூட் செய்ய முன்னர் நீங்கள் இதை பற்றி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே கூறுகிறேன்.

அன்றொஇட் மார்க்கெட் செயலிகள் அல்லாத செயலிகள் ஸ்மார்ட் போனில் நிறுவ முடியும் என்பதால், இணைத்தின் மூலம் வைரஸ் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. இதை நீங்கள் தவிர்க்க வேண்டுமானால் சிறந்த ஒரு வைரஸ் காப்பு செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் நிறுவி இருத்தல் வேண்டும்.

குறிப்பு 

என்னை பொறுத்த வரை ரூட் செய்வதால் பெரிதாக பிரச்சினை ஏதும் வருவதாக  தெரியவில்லை. ஏனெனில் நானும் என்னுடைய அன்றொஇட் ஸ்மார்ட் போனை ரூட் செய்து தான் உபயோகித்து வருகிறேன். இது வரை எந்த பிரச்சினையும் இல்லை. இருந்த போதிலும், உங்களது ஸ்மார்ட் போனின் பாதுகாப்பு உங்கள் கைகளில் தான்.

ஆகவே உங்களது ஸ்மார்ட் போனை ரூட் செய்ய வேண்டும் என்று நினைத்தால் கீழ் உள்ள லின்க்கை கிளிக் செய்து, உங்கள் ஸ்மார்ட் போனில் இருந்த படியே ஐந்தே நிமிடத்தில் அன்றொஇட் போனை ரூட் செய்வது எவ்வாறு என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Android போனை 5 நிமிடத்திற்குள் ரூட் செய்வது எப்படி?

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள்  நண்பர்களுடனும் பேஸ்புக் அல்லது மற்றைய சமூக வலைத்தளங்கள் ஊடக பகிர்ந்து கொள்ளுங்கள்.

Android போனை 5 நிமிடத்திற்குள் ரூட் செய்வது எப்படி? போனில் இருந்தே இலகுவாக ரூட் செய்து கொள்ளலாம்.

எமது முன்னைய பதிவில் அன்றொஇட் ரூட் செய்வதன் நன்மை மற்றும் தீமைகளை தெரிந்து கொண்டீர்கள். ஆகவே இந்த பதிவில் உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனை எப்படி மிக இலகுவாக ரூட் செய்வது என்பதை விளக்கப்படுத்துகிறேன். கீழே வழங்கப்பட்டுள்ள லின்க்கின் மூலம் ரூட் செய்வதன் நன்மை தீமைகளை தெரிந்து கொள்ள முடியும்.

ரூட் செய்வதன் நன்மைகளும் தீமைகளும்..

பல வாசகர்கள் கேட்டு கொண்டதட்கினங்க இன்று அன்றொஇட் ரூட்டிங் பற்றி எழுதாலாம் என்று எண்ணியுள்ளேன். நீங்கள் உங்களது அன்றொஇட் போனை ரூட் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இதற்கான வழியை, நண்பன் கூகுளில் தேடிப்பார்த்தால், பல்வேறு செயன்முறைகளை செய்து தான் ரூட் செய்ய வேண்டும், கணணி இருக்க வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்டிருக்கும்.

அப்படியெல்லாம் இல்லாமல் ஐந்தே நிமிடத்தில் உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் மூலமாகவே மிக இலகுவாக ரூட் செய்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.


உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனை ரூட் செய்ய தேவையானவை

  • உங்களது ஸ்மார்ட் போன் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
  • பேட்டரி சார்ஜ் ஆனது 50%-இற்கு அதிகமாக இருக்க வேண்டும்.
  • இன்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும்.


குறிப்பு 

என்னை பொறுத்த வரை ரூட் செய்வதால் பெரிதாக பிரச்சினை ஏதும் வருவதாக  தெரியவில்லை. ஏனெனில் நானும் என்னுடைய அன்றொஇட் ஸ்மார்ட் போனை ரூட் செய்து தான் உபயோகித்து வருகிறேன். இது வரை எந்த பிரச்சினையும் இல்லை. இருந்த போதிலும், உங்களது ஸ்மார்ட் போனின் பாதுகாப்பு உங்கள் கைகளில் தான்.

முதலாவதாக கீழேவ்வழங்கப்பட்டு இருக்கும் ரூட் செய்வதற்கான 'அன்றொஇட் ரூட்' செயலியை உங்களது ஸ்மார்ட் போனிற்கு பெற்று கொள்ளுங்கள்.
அடுத்து உங்களது போனில் செட்டிங்-இற்கு சென்று Security என்பதை கிளிக் செய்யுங்கள்.

அங்கே Unknown Sources என்று இருப்பதில் டிக்-ஐ செயட்படுத்துங்கள்.


அடுத்து தரவிறக்கிய ரூட் செய்வதற்கான செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் நிறுவுங்கள்.

நிறுவப்பட்ட செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் ஆரம்பியுங்கள்.

பரிந்துரைக்கப்படும் பதிவு

Android Phone-ல் SD Card-ஐ RAM ஆக மாற்றுவது எப்படி?

அதிலே One Click Root என்பதை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான் இப்போது உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போன் ஆனது ரூட் ஆக தயாராகிவிடும்.

ரூட் செய்வதற்கான செயலியை இங்கே கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளுங்கள்.

குறிப்பு - ரூட் செயன்முறை முடியும் வரை உங்களது ஸ்மார்ட் போனில் Display வெளிச்சம் Off ஆகாமல் பார்த்து கொள்ளுங்கள். இல்லையேல் இன்டர்நெட் இணைப்பு தடைப்பட்டு ரூட் செயன்முறை பாதியிலேயே நின்று விட வாய்ப்பு உண்டு.

அவ்வளவு தான். இப்போது உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போன் ஆனது, கிட்டத்தட்ட ஐந்து நிமிடத்திற்குள் ரூட் செய்யப்பட்டு விடும்.

உங்களது ஸ்மார்ட் போனில் ரூட் சரியாக செய்யப்பட்டு விட்ட பின்னர் ரூட் Succeed என்ற ஒரு வாசகம் தோன்றும்.

ரூட் செய்வதற்கான செயலியை பெற்றுக்கொள்வதில் ஏதேனும் பிரச்சினை இருந்தாலோ அல்லது ரூட் செய்யும் செய்முறை பற்றிய கேள்விகள் இருந்தாலோ எமது பேஸ்புக் பேஜ்-க்கு மெசேஜ் அனுப்பி ரூட் செய்யும் செயலியையும் விளக்கங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.


எமது பேஸ்புக் பேஜ்-ஐ தொடர்பு கொள்ளும் வசதி மேலே தரப்பட்டுள்ளது. எமது பதிவுகள் பிடித்திருந்தால் உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ளுங்கள்.

உங்களது Selfie போட்டோகளை அனிமேஷன் GIF போட்டோ ஆக மாற்றுவது எப்படி?

செல்பி-களின் வளர்ச்சியானது ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. ஸ்மார்ட் போன் உபயோகிக்கும் அனைவருமே இந்த செல்பி புகைப்படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். செல்பி-களை எடுத்து தமது பேஸ்புக்-லோ அல்லது மற்றைய சமூக வலைத்தளங்களிலோ தமது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு லைக் பெறுவதில் இன்றைய சமூகம் மும்முரமாக இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

செல்பி சம்மந்தமான பதிவு ஒன்றை ஏற்கனவே எழுதி இருந்தேன். அந்த பதிவின் சுருக்கத்தை கீழே தந்துள்ளேன்.


செல்பி-களை நாம் எமது ஸ்மார்ட் போனில் எடுக்கும் போது பொதுவாக அனைவருமே எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை தான், சரியாக புகைப்படங்களை கிளிக் செய்ய முடியாமல் போவது. இதற்கு காரணம் ஒரே கையால் ஸ்மார்ட் போனையும் பிடித்து கொண்டு போடோவையும் கிளிக் செய்ய முயற்ச்சிப்பது.

இனி ஒரே கையில் ஸ்மார்ட் போனையும் பிடித்துக்கொண்டு போடோவையும் கிளிக் செய்ய தடுமாறிக்கொண்டு இருக்க தேவையில்லை. சிறியதா ஒரு விசில் அடித்தால் செல்பி எடுத்து விடலாம்.

அந்த பதிவை நீங்கள் தவற விட்டு இருந்தால் கீழே உள்ள லின்க்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

உங்களது ஸ்மார்ட் போனில் விசில் ஒன்று அடிப்பதன் மூலம் Selfie எடுப்பது எப்படி?

ஆகவே இன்றும் இந்த செல்பி உடன் சம்மந்தமான பதிவொன்றை தரலாம் என்று நினைக்கின்றேன். அதாவது நீங்கள் பேஸ்புக்-இல் ஷேர் செய்ய எடுக்கும் அழகான உங்களது செல்பியை எவ்வாறு GIF படமாக மாற்றுவது என்று கூறுகிறேன்.
இந்த வேலையை இலகுவாக செய்து முடிக்க கீழே வழங்கப்பட்டிருக்கும் அருமையான அன்றொஇட் செயலிகள் எமக்கு உதவுகின்றது. இந்த செயலிகளை பயன்படுத்தி உங்களது ஒரு சில செல்பி-களை இணைத்து அழகான GIF படமாக மாற்றிக்கொள்ளலாம்.

உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் Play Store-க்கு சென்றோ அல்லது கீழே உள்ள லின்க்கின் மூலம் உங்களது ஸ்மார்ட் போனிற்கு இந்த அருமையான செயலிகளை தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்.

GIF Camera
Gif Me! Camera
GifBoom
Phogy, 3D Camera

பேஸ்புக் நிறுவனமானது விரைவில் எமது ப்ரோபைல் புகைப்படத்துக்கு பதிலாக GIF புகைப்படத்தை உபயோகிக்கும் வசதியை தரவுள்ளது குறிப்பிடத்தக்கது. இது சம்மந்தமான தகவல்கள் மற்றும் இதை எப்படி உங்கள் ப்ரோபைல்-இல் உபயோகிப்பது என்ற தகவல்களை கீழே உள்ள லின்க்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக் அறிமுகப்படுத்தும் அனிமேஷன் ப்ரோபைல் பிக்சர் வசதி

எமது பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது நண்பர்களுடன் பகிந்து கொண்டு எமக்கு ஆதரவு தெரிவியுங்கள்.

Android போனில் மறைந்து கிடக்கும் அழைப்பவர் இலக்கத்தை மறைக்கும் வசதி

ஸ்மார்ட் போன் வைத்து இருக்கும் அனைவருமே தேடிப்பார்க்கும் ஒரு விடயம் தான், நாம் எமது நண்பர் ஒருவருக்கு அழைப்பொன்றை மேற்கொள்ளும் போது, எமது தொலைபேசி இலக்கம் தெரியாமல் தடுப்பது எப்படி என்று.

நீங்கள் அன்றொஇட் ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர் என்றால், கண்டிப்பாக Play Store-ல் அழைப்பவர் இலக்கத்தை மறைக்க ஏதேனும் செயலிகள் காணப்படுகிறதா என்று தேடிப்பார்த்து இருப்பீர்கள்.

நீங்கள் Play Store-ல் சென்று அழைப்பவர் இலக்கத்தை மறைக்க  முடியுமான செயலிகளை தேடிப்பார்த்தால் அங்கே நூற்றுக்கணக்கான செயலிகள் காணப்படும். இதிலே சில செயலிகள் இலவசமாகவும் ஏனைய சில செயலிகளை பணம் செலுத்தியும் பெற்றுக்கொள்ள முடியும்.


ஆனால் இவற்றில் பல செயலிகள் எமது தேவையை நிறைவேற்ற தவறுகின்றன. இதனால் நீங்கள் இவ்வாறான அழைப்பவர் இலக்கத்தை மறைக்கும் செயலிகளை பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள நினைத்தால், அதை வாங்க முன், அந்த செயளியினுடைய செயற்பாடுகள் பற்றிய தகவல்களை கூகுளில் தெரிந்து கொண்ட பின்னர் வாங்குங்கள்.

ஆனால் இவ்வாறான செயலிகளை வாங்க முன்னர், நீங்கள் அன்றொஇட் ஸ்மார்ட் போன் பாவனையாளர் என்றால் இந்த விடயத்தை கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

அன்றொஇட் போன் ஆனது, தனது போன் செட்டிங்-லேயே அழைக்கும் இலக்கத்தை மறைப்பதற்கான வசதியை வழங்கி இருக்கிறது. இதை பலபேர் கவனிக்க தவறி இருக்கிறோம்.

உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனை எடுங்கள்.

அதிலே செட்டிங்-கு செல்லுங்கள்.

அங்கே Calls என்று இருக்கும் செட்டிங்-ஐ தெரிவு செய்யுங்கள்.

அடுத்து Additional Settings என்பதை தெரிவு செய்யுங்கள்.
அடுத்து Caller ID என்பதை தெரிவு செய்யுங்கள்.

அதன் பின்னர் Hide Number என்பதை தெரிவு செய்யுங்கள்.


குறிப்பு

இந்த சேவையானது நீங்கள் உபயோகிக்கும் சிம் நெட்வொர்க்குடன் இணைந்தே செயற்படும். ஆகவே உங்களது சிம் நிறுவனத்தால் இந்த சேவை பாவனையில் இருக்கும் பட்ச்சத்திலேயே, உங்களால் உங்களது இலக்கத்தை மறைத்து இன்னுமொருவருக்கு அழைப்பை மேற்கொள்ள முடியும்.

அன்றொஇட் ஸ்மார்ட் போனுடன் வரும் இந்த அழைப்பவர் இலக்கத்தை மறைக்கும் வசதியை வசதியை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் குறிப்பிட்ட சில சிம் நெட்வொர்க்-கள் வழங்குகிறது. அதிலும் இந்த சேவையை பயனர்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், குறிப்பிட்ட சிம் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு அமைய ஒரு தொகை பணத்தை செலுத்தியே பெற்றுக்கொள்ள கூடியதாய் உள்ளது.

எனக்கு தெரிந்த வரை இந்த சேவையானது இந்தியாவில் இன்னும் எந்த சிம் நிறுவனத்தாலும் செயட்படுத்தப்படவில்லை. இருந்தாலும் உங்களது அண்டொஇட் ஸ்மார்ட் போனில் இதை முயற்ச்சித்து பாருங்கள்.

அன்ட்ரெஇட் போனில் Contact இலக்கங்களை கூகுள் கணக்கிற்கு Backup எடுத்து வைப்பது எப்படி?

ஸ்மார்ட் போன்களுடன் சம்மந்தப்பட்ட மற்றுமொரு பதிவை எழுதலாம் என்று நினைக்கின்றேன். ஆகவே இன்று நான் எடுத்துக்கொண்ட தலைப்பு, ஸ்மார்ட் போன்களில் நாம் சேமித்து வைக்கும் எமது உறவினர் மற்றும் நண்பர்களின் தொலைபேசி இலக்கங்கள் சம்மந்தமானது.

எமது Android ஸ்மார்ட் போன்களில் நாம் சேமித்து வைத்து இருக்கும் தொலைபேசி இலக்கங்கள் குறிப்பிட்ட சில காரணங்களினால் அழிந்து போக வாய்ப்பு உள்ளது.

எமக்கு தேவையான முக்கியமான ஏதேனும் ஒரு தொலைபேசி இலக்கம் அழிந்து போனால் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.


ஏற்கனவே முன்னைய பதிவொன்றில் உங்களது சிம் கார்டு-இல் இருந்து அழிந்த தொலைபேசி இலக்கங்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்டெடுப்பது என்று எழுதியிருந்தேன். அந்த பதிவை நீங்கள் தவறவிட்டிருந்தால் கீழே உள்ள லின்க்கின் மூலம் வாசித்து கொள்ளலாம்.

Sim Card-ல் இருந்து அழிந்த இலக்கங்களை மீளப்பெறுவது எப்படி?

ஆனால் வரும் முன் காப்பது தான் என்றுமே சிறந்தது என்பதற்கிணங்க, எமது ஸ்மார்ட் போனில் இருக்கும் அனைத்து தொலைபேசி இலக்கங்களையும் எவ்வாறு Backup எடுத்து வைத்து கொள்வது என்று பார்ப்போம்.

Android போனில் இருக்கும் தொலைபேசி இலக்கங்களை கூகுள் கணக்கிற்கு Backup எடுப்பது எப்படி?

உங்களது ஸ்மார்ட் போனில் Contact என்பதை கிளிக் செய்யுங்கள்.

அடுத்து மேலே வலது மூலையில் Settings என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து Contacts என்பதை தெரிவு செய்யுங்கள்.

அதிலே Import/ Export என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து Import From Sim Card என்பதை தெரிவு செய்யுங்கள்.


அடுத்து தோன்றும் திரையில் உங்களது Android போனுடன் இணைக்கப்பட்டிருக்கும் கூகுள் கணக்கை தெரிவு செய்யுங்கள்.

அதன் பின்னர் உங்களது சிம் கார்டு-இல் இருக்கும் அனைத்து தொலைபேசி இலக்கங்களும் பட்டியலிட்டு காட்டப்படும். 

அங்கே Select All என்பதை தெரிவு செய்து பின்னர் Done என்பதை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான். இப்போது உங்களது அனைத்து தொலைபேசி இலக்கங்களும் உங்களது கூகுள் கணக்கிற்கு Copy எடுக்கப்பட்டு விட்டது.

இந்த முறையை பாவித்து உங்களது ஸ்மார்ட் போனில் சேமிக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களையும் கூகுள் கணக்கிற்கு Backup எடுத்து வைத்து கொள்ள முடியும்.

ஏதேனும் ஒரு காரணத்தால் உங்களது சிம் அல்லது போனில் இருக்கும் தொலைபேசி இலக்கம் அழிந்து போனால் உங்களது கூகுள் கணக்கிற்கு சென்று மிக இலகுவாக மீட்டெடுத்து கொள்ள முடியும்.

Viber மற்றும் WhatsApp-ல் வரும் போட்டோ வீடியோகள் எமது ஸ்மார்ட் போனிற்கு தானாக டவுன்லோட் ஆகுவதை தடுப்பது எப்படி?

ஸ்மார்ட் போன் ஒன்றை வைத்து இருக்கும் அனைவருக்குமே வைபர்-ம் வாட்ஸ்அப்-ம் அத்தியவாசியமான  இரண்டு செயலிகள் தான். இன்றைய காலகட்டத்தில் குறும் செய்தி சேவையானது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வர வைபர் மற்றும் வாட்ஸ்அப் செயலிகள் ஆனது குறும் செய்தி சேவையினது இடத்தை போட்டி போட்டுக்கொண்டு பிடித்து வருகிறது.

இப்படி அனைத்து ஸ்மார்ட் போன் பாவனையாளர்களாலும் கவர்திளுக்கப்பட்ட இந்த இரண்டு செயலிகளை பற்றியது தான் இன்றைய பதிவு.

வாட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய இரண்டு செயலிகளும் ஸ்மார்ட் போன்கள் மத்தியில் மெசேஜ்-களை பகிர்ந்து கொள்வதற்கான சிறப்பு செயலிகளாக பார்க்கப்பட்டு வருகிறது. இவை இரண்டும் தமது பயனர்களுக்கு பல்வேறுபட்ட வசதிகளை அறிமுகப்படுத்தி பல மில்லியன் கணக்கான பாவனையாளர்களை திருப்திப்படுத்தி வருகிறது.


இந்த இரண்டு செயளிகலுமே கிட்டத்தட்ட பொதுவான வசதிகளையே தமது பாவனையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. உதாரணமாக குழுக்களுக்கிடையேயான மெசேஜ் வசதி, வாய்ஸ் அழைப்பு வசதி, தனிநபர் மெசேஜ் வசதி என்று பல்வேறு வசதிகளை வழங்குகிறது.

வாட்ஸ்அப் மற்றும் வைபர் இந்த 2 செயளிகளிலுமே நாம் அவதானிக்க கூடிய ஒரு குறிப்பிட்ட விடயம் தான், யாரேனும் வாட்ஸ்அப் அல்லது வைபர் மூலமாக ஒரு புகைப்படம் அல்லது வீடியோ ஒன்றை அனுப்பினால் அது எமக்கு தெரியாமலேயே எமது ஸ்மார்ட் போனில் தரவிறக்கப்பட்டு Gallery-யில் சேமிக்கப்பட்டிருக்கும்.

இதனால் எமக்கு இரண்டு வகையான பாதிப்புக்கள் ஏற்படுகின்றது.
  1. எமது டேட்டா வீணடிக்கப்படுவது.
  2. தேவையில்லாத போட்டோ மற்றும் வீடியோகள் எமது Gellary-யில் வந்து சேர்வது.
ஆகவே வாட்ஸ்அப் மற்றும் வைபர்  இல் எமது நண்பர்கள் அனுப்பும் போட்டோ அல்லது வீடியோ தானாக கேலரி -இக்கு டவுன்லோட் ஆக்குவதை எப்படி தடுப்பது என்று பார்ப்போம்.

வாட்ஸ்அப்-ல் மீடியா File தானாக டவுன்லோட் ஆக்குவதை தடுப்பது எப்படி?

உங்கள் வாட்ஸ்அப்-ஐ திறந்து செட்டிங்-இற்கு செல்லுங்கள்.

அடுத்து Chat and Calls என்பதை கிளிக் செய்யுங்கள்.

அங்கே Media Auto Download என்பதை கிளிக் செய்யுங்கள்.


இப்போது இந்த செட்டிங்க்ஸ்-ஐ உபயோகித்து உங்கள் தேவைக்கு ஏற்ப மீடியா டவுன்லோட் ஆகுவதை கட்டுபடுத்த முடியும்.


வைபர்-ல் மீடியா File தானாக டவுன்லோட் ஆக்குவதை தடுப்பது எப்படி?
உங்கள் வைபர்-ஐ திறந்து செட்டிங்-இற்கு செல்லுங்கள்.


அங்கே Media என்பதை கிளிக் செய்யுங்கள்.


இப்போது செட்டிங்-ல் உங்கள் தேவைக்கு ஏற்ப வைபர்-ல் வரும் மீடியா டவுன்லோட் ஆகுவதை கட்டுபடுத்த முடியும்.


இந்த முக்கியமான செட்டிங்-ஐ எம்மில் பலபேர் செயற்படுத்த தவறி இருக்கலாம். அதனாலேயே இந்த பதிவை இன்று எழுதலாம் என்று நினைத்தேன். இந்த செட்டிங்-களை செய்து கொள்வதன் மூலம் உங்களது டேட்டா வீணடிக்கப்படுவதையும் அதே போல் Gallery-யில் தேவையில்லாத போட்டோ மற்றும் வீடியோ-கள் தோன்றுவதையும் தவிர்க்க முடியும்.

Dial Pad ## ட்ரிக் மூலம் அன்ரோயிட் போனில் இருக்கும் மெசேஜ் மற்றும் தொலைபேசி இலக்கங்களை மறைப்பது எப்படி?

எமக்கு தேவையான அனைத்து விடயங்களையும் எமது ஸ்மார்ட் போனில் வைத்து அதை பாதுகாப்பதற்காக ஏதேனும் ஒரு லாக்கர் செயலியை ஸ்மார்ட் போனில் நிறுவி இருப்போம்.

ஆனால் யாரவது எமது ஸ்மார்ட் போனை எடுத்து பார்த்தால், எமது ஸ்மார்ட் போனில் லாக்கர் செயலி ஒன்று நிறுவப்பட்டிருப்பதை கண்டு கொள்ள கூடியதாய் இருக்கும்.

இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட நபர் எமது ஸ்மார்ட் போனில் நிறுவப்பட்டிருக்கும் லாக்கர் செயலியை திறந்து பார்க்க முயற்சிக்கலாம்.

ஆகவே இன்று நான் அறிமுகப்படுத்தபோகும் விடயம் என்னவென்றால், எமது ஸ்மார்ட் போனில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட குறும் செய்திகள் அல்லது தொலைபேசி இலக்கங்களை ஸ்மார்ட் போனில் இருப்பதே தெரியாமல் மறைப்பது எப்படி என்று பார்ப்போம்.


இதை நான் கீழே வழங்கி இருக்கும் குறிப்பிட்ட செயலி மூலம் செய்து கொள்ளலாம். இந்த செயலியின் சிறப்பம்சம் என்னவென்றால், எமக்கு தேவையான குறும் செய்திகள் மற்றும் தொலைபேசி இலக்கங்களை ஸ்மார்ட் போனில் இருந்து மறைப்பதோடு இந்த செயலியையும் ஸ்மார்ட் போனில் இருந்து மறைத்து விடலாம்.

பரிந்துரைக்கப்படும் பதிவு

ஆகவே எமது ஸ்மார்ட் போனில் லாக்கர் செயலி ஒன்று நிருவப்பட்டிருப்பதே யாருக்கும் தெரிய வராது.

முதலாவதாக இந்த லின்க்கில் சென்று Private SMS & Call செயலியை தரவிறக்கி கொள்ளுங்கள்.

தரவிறக்கிய செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் நிறுவி கொள்ளுங்கள்.

இப்போது இந்த செயலி மூலம் உங்களது ஸ்மார்ட் போனில் இருக்கும் உங்களுக்கு தேவையான குறும் செய்தி அல்லது தொலைபேசி இலக்கங்களை தேர்தெடுத்து Import செய்து கொள்ளுங்கள்.


இந்த செயலிக்கு உங்களது ஸ்மார்ட் போனில் இருக்கும் தொலைபேசி இலக்கங்களை Import செய்து கொள்ளலாம்.


அதே போல் உங்களுக்கு தேவையான குறும் செய்திகளை Import செய்து கொள்ளலாம்.


மற்றும் புதிய தொலைபேசி இலக்கங்களை உருவாக்குவது, உங்களுக்கு தேவையில்லாத உள்வரும் அழைப்புக்களை Block செய்வது என்று மேலும் பல்வேறு வசதிகளை வழங்குகிறது.

அடுத்ததாக இந்த செயலியை எப்படி எமது ஸ்மார்ட் போனில் இருந்து மறைப்பது என்று பார்ப்போம்.
இதை செய்ய இந்த செயலியின் Settings சென்று அங்கே Hide Icon என்று On இருப்பதை செய்யுங்கள்.


அடுத்து இந்த செயலிக்கான உங்களது கடவுச்சொல்லை வழங்குங்கள்.


இப்போது இந்த செயலி உங்களது ஸ்மார்ட் போனில் இருந்து மறைந்து விடும். மறுபடியும் இந்த செயலில் மறைத்து வைக்கப்பட்ட File-களை பார்க்க வேண்டுமானால் உங்களது ஸ்மார்ட் போனில் Dial Pad மூலமாக தான் பார்க்க வேண்டும்.

அதாவது உங்களது ஸ்மார்ட் போனில் Dial Pad-ஐ திறவுங்கள்.

அதிலே ## என்று டைப் செய்து அதற்கு பிறகு குறிப்பிட்ட செயலிக்கான உங்களது கடவுச்சொல்லை வழங்குங்கள்.

உதாரணமாக உங்களது கடவுச்சொல் 1234 என்றால் Dial Pad-இல் ##1234 என்று டைப் செய்து Call பட்டன்-ஐ அழுத்துங்கள். அடுத்த நொடி, மறைந்து கிடக்கும் இந்த செயலியை திறப்பதற்கான திரை தோன்றும். அங்கே உங்களது மறைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து File-களையும் பார்த்து கொள்ளலாம்.

Android மற்றும் iPhone-க்கான சிறப்பு WhatsApp ஸ்மைலி பேக் 2016

எனது இன்றைய பதிவானது ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் காணப்படும் அடிப்படை தேவையான வாட்ஸ்அப் பற்றியது. ஒரு சில நாட்களுக்கு முன்னர், வாட்ஸ்அப்-இல் எவ்வாறு ஸ்டைலான எழுத்துக்களை உபயோகித்து உங்களது நண்பர்களை ஆச்சிரியப்படுத்துவது என்று கூறி இருந்தேன். அந்த பதிவில் வாட்ஸ்அப்-க்கான ஒரு சிறு விளக்கத்தை கீழ் கூறியுள்ளவாறு  வழங்கி இருந்தேன். அதாவது,

ஸ்மார்ட் போன்களில் இருந்து எமது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு குறும் செய்தி அனுப்ப பெரும்பாலும் நாம் வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்துகிறோம். நம் அனைவருக்குமே தெரியும் வாட்ஸ்அப்-ன் சிறப்பம்சங்கள். தமது பயனர்களுக்காக வாட்ஸ்அப் ஆனது பல்வேறு வசதிகளை தினம் தோறும் தந்து கொண்டு இருக்கிறது.

ஸ்மார்ட் போனை நாம் கையில் எடுத்தால் வாட்ஸ்அப்-ல் நாம் செலவிடும் நேரமே அதிகம் என்று சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு இந்த வாட்ஸ்அப் ஆனது நம் அனைவரையும் தன்பக்கம் கவர்ந்திளுத்துள்ளது.



இந்த பதிவை நீங்கள் தவற விட்டு இருந்தால் கீழே உள்ள லின்க்கின் மூலம் சென்று தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp-ல் வித்தியாசமான எழுத்துக்களை பயன்படுத்தி ஸ்டைலான Message-களை அனுப்புவது எப்படி?

இன்றைய பதிவில் வாட்ஸ்அப்-ஐ மேலும் அழகுபடுத்த கூடிய மற்றுமொரு உபாயத்தை உங்களுக்கு தெரிவிக்கின்றேன்.

ஏற்கனவே வாட்ஸ்அப்-ல் எமது அன்புக்குரியவருடன் நாம் Chat செய்யும் போது Smiley-களை அனுப்புவதற்கான வசதியை வாட்ஸ்அப் நமக்கு தந்துள்ளது. இதற்கு ஒரு படி மேலே சென்று அழகான, வித்தியாசமான Smiley-கள் மூலம் உங்களது வாட்ஸ்அப் Chat-ஐ எப்படி மேலும் அழகு படுத்துவது என்று கூறுகிறேன்.

உங்களது Android மற்றும் iPhone-க்கான வாட்ஸ்அப் Smiley Pack-களை உபயோகிப்பதன் மூலம் பல்வேறு வகையான Smiley-களை உங்களது வாட்ஸ்அப்-ல் உபயோகித்து கொள்ளலாம்.

நீங்கள் Android பாவனையாளர் எனில் கீழே வழங்கப்பட்டிருக்கும் செயலிகள் மூலம் வாட்ஸ்அப்-க்கான சிறப்பு Smiley-களை பெற்றுக்கொள்ளலாம்.
Stickers for WhatsApp - இந்த செயலியானது பார்ப்பதற்கு கண்ணை கவரும் வகையிலான பல்வேறு Smiley-களை கொண்டுள்ளது. இந்த செயலியை தரவிறக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.



What'Smileys - இந்த செயலியானது உங்களது வாட்ஸ்அப் Chat-ஐ அழகுபடுத்த நூற்றுக்கணக்கான Smiley-களை தன்னுள் கொண்டுள்ளது. இந்த செயலியை தரவிறக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.



நீங்கள் iPhone பாவனையாளர் எனில் கீழே வழங்கப்பட்டிருக்கும் செயலிகள் மூலம் வாட்ஸ்அப்-க்கான சிறப்பு Smiley-களை பெற்றுக்கொள்ளலாம்.
Emojidom Smileys - இந்த செயலியானது iPhone பாவனையாளர்களின் வாட்ஸ்அப்-ஐ அழகு படுத்த மிகவும் கவர்ச்சிகரமான Smiley-களை கொண்டுள்ளது. இந்த செயலியை தரவிறக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.



Sticker Keyboard - இந்த செயலியும் iPhone-இன் வாட்ஸ்அப் Chat-ஐ அழகுபடுத்த அருமையான Smiley-களை கொண்டுள்ளது. இந்த செயலியை உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவ விரும்பினால் இங்கே கிளிக் செய்யவும்.


என்ன நண்பர்களே. இந்த சிறப்பு Smiley-களை உங்கள் நண்பர்களோடு வாட்ஸ்அப்-இல் அரட்டை அடிக்கும் போது உபயோகித்து உங்களது Chat-க்கு இன்னும் அழகு சேர்த்து கொள்ள முடியும்.

கணணியின் RAM-ஐ Notepad மூலம் Clean செய்வது மற்றும் Ram-ன் அளவை அதிகரித்து எப்படி?

கணனியில் இருக்கும் RAM-ன் முக்கியத்துவத்தை ஏற்கனவே முன்னைய பதிவுகளில் கூறி இருந்தேன். கணணியின் வேகத்தை தீர்மானிப்பதில் RAM முக்கிய பங்கை வகிக்கிறது.

கணிணியின் முதன்மை நினைவகமே RAM என்று கூறப்படும். இதன் விரிவாக்கம் Random Access Memory என்பதாகும்.

பொதுவாக இதன் அளவு 512 MB முதல் 8 GB-இக்கும் அதிகமான அளவில் கிடைக்கிறது. இப்போது இன்னும் அளவில் அதிகரிக்கப்பட்ட RAM களும், சிறப்பு கணிகளுக்கான திறன் கொண்ட Ram வகைகளும் சந்தைக்கு வந்து விட்டது.

கணணி அல்லது மடிக்கணணி பாவிக்கும் அனைவருக்குமே இருக்கும் பொதுவான பிரச்சினையே கணனியின் வேகம். இன்று நாம் பாவிக்கும் கணணி அல்லது மடிக்கணணிகளானது  சாதாரணமாக 2-4 GB அளவு கொண்டதாக காணப்படுகிறது. இருந்த போதிலும் பல்வேறு வகையான மென்பொருட்களை எமது கணனியில் ஒரே நேரத்தில் உபயோகிக்கும் போது, எம்முடைய கணனியின் வேகத்தில் மாற்றத்தை அவதானிக்க கூடியதாய் இருக்கும்.


இதற்கு மிக முக்கியமான காரணம் தான் உங்கள் கணனியில் இருக்கும் RAM-ன் அளவு. ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளை கணனியில் செய்யும் போது அல்லது எதாவது வீடியோ கேம்ஸ்களை விளையாடும் போது Ram பாவணை அளவானது அதிகளவாக இருக்கும். இதன் காரணமாகவே கணனியில் வேகம் குறைகிறது.

இவ்வாறு உங்களது கணனியின் வேகம் மந்தமாக காணப்படும் சந்தர்ப்பத்தில் கீழ்வரும் இரண்டு Notepad உபாயங்களை பயன்படுத்தி உங்களது கணணியை சீராக இயங்க வைக்க முடியும்.

பரிந்துரைக்கப்படும் பதிவு



முதலாவதாக உங்களது கணனியில் Notepad ஒன்றை ஆரம்பியுங்கள்.

அதிலே கீழே காட்டப்பட்டு இருப்பது போல் டைப் செய்யுங்கள்.
FreeMem=Space(409600000)


குறிப்பு

மேலே குறிப்பிட்டுள்ள பெறுமதிகள் உங்களது RAM அளவை பொறுத்து வேறுபாடும். உதாரணமாக,
உங்களது RAM-ன் அளவு 512MB என்றால் > FreeMem=Space(51200000)
உங்களது RAM-ன் அளவு 1GB என்றால் > FreeMem=Space(102400000)
உங்களது RAM-ன் அளவு 2GB என்றால் > FreeMem=Space(204800000)
உங்களது RAM-ன் அளவு 4GB என்றால் > FreeMem=Space(409600000)

இப்போது அந்த Notepad-ஐ Boost.vbs என்று உங்களது கணனியில் சேமித்து கொள்ளுங்கள்.

அடுத்து இன்னுமொரு Notepad-ஐ ஆரம்பித்து அதிலே கீழே காட்டியிருப்பது போல் டைப் செய்யுங்கள்.
mystring=(80000000)


இந்த Notepad-ஐ Boost2.vbs என்ற பெயரில் உங்களது கணனியில் சேமித்து கொள்ளுங்கள்.

இப்போது உங்களது கணணி மந்தமாக செயற்படும் சந்தர்ப்பத்தில் இந்த இரண்டு Notepad File-களையும் Double Click செய்து உங்களது கணனியில் ஆரம்பித்து விடுங்கள்.


இந்த இரண்டு File-களும் ஆரம்பிக்கப்பட்ட சில நொடிகளில் உங்களது கணனியின் RAM சீராக்கப்பட்டு உங்களது கணணி முன்னரிலும் பார்க்க வேகமாக இயங்கும்.

இந்த உபாயத்தை பயன்படுத்தி உங்களது கணனியில் பல வேலைகளை செய்துகொண்டு இருக்கும் போது கணனியின் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டால் RAM-ஐ சீராக்கி கணனியின் வேகத்தை அதிகரித்துக்கொள்ள முடியும்.

பேஸ்புக் அறிமுகப்படுத்தும் அனிமேஷன் ப்ரோபைல் பிக்சர் வசதி

இன்று இணையத்தை உபயோகிக்கும் அனைவருமே தினம்தோறும் செல்லும் ஒரு தளம் தான் இந்த பேஸ்புக். இன்றைய தொழிநுட்பமயமான வாழ்க்கை நடைமுறையில் நம் அனைவரையும் தன்பால் கவர்ந்து இழுத்திருக்கிறது இந்த பேஸ்புக் தனக்கென்று ஒரு தனி சாம்ராஜ்யத்தையே இருவாக்கி உள்ளது. தினம் தோறும் இணையத்தை உபயோகிக்கும் பயனர்களில் 70%-இற்கும் மேலானவர்கள் இந்த பேஸ்புக் பக்கம் வந்து போக தவறவில்லை.

இவ்வாறு அனைவர் மனதிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்து உள்ள பேஸ்புக், தனது பயனர்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புது விதமாக கவர்ந்து இழுத்துக்கொண்டிருக்கிறது. இதற்கு உதாரணமாக பேஸ்புக் பேஜ், பேஸ்புக் குரூப் என்று பல்வேறு வகையான புது முயற்சிகளை தினம் தோறும் மேற்கொண்டு வருகிறது.



பரிந்துரைக்கப்படும் பதிவு


இந்த வரிசையில் சில மாதங்களுக்கு முன்பு பேஸ்புக் நிறுவனம் அனிமேஷன் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிடக்கூடிய வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது. உண்மையிலே இந்த வசதியானது பல்வேறு தரப்பினரையும் பெரிதாக கவர்ந்து இருந்தது.
இந்த அனிமேஷன் புகைப்படங்களுக்கு பேஸ்புக் பயனர்களுக்கு மத்தியில் கிடைத்த பெரும் வரவேற்பை தொடர்ந்து தற்போது பேஸ்புக் நிறுவனம் ஆனது, பேஸ்புக் கணக்கு பயனர்களின்  ப்ரோபைல் பிக்சரிஇற்கு பதிலாக இந்த அனிமேஷன் புகைப்படங்களை உபயோகிக்கும் வசதியை வழங்கவிருக்கிறது.

ஏற்கனவே இந்த ப்ரோபைல் பிக்சர்க்கான அனிமேஷன் வசதியை பேஸ்புக் பரீட்சித்து பார்க்க தொடங்கி விட்டது. பேஸ்புக்கின் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கடந்த சில நாட்களில் வெளி வந்த தகவல் படி, முதலாவதாக ஸ்மார்ட் போன் மூலம்  பேஸ்புக் உபயோகிப்பவர்களுக்கே இந்த வசதியை பெற்று கொள்ள கூடியதாய் இருக்கும்.

பேஸ்புக் ஏற்கனவே இந்த அனிமேஷன் ப்ரோபைல் பிக்சர் வசதியை பரீட்ச்சித்து பார்க்க தொடங்கி விட்டதால், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க பேஸ்புக் பயனர்களில் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு ஏற்கனவே இந்த வசதி கிடைத்து விட்டது.

இதனால் வெகு விரைவில் எமது பேஸ்புக் ப்ரோபைல் பிக்சரிலும் இந்த வசதியை எதிர்பார்க்கலாம்.

உங்கள் நண்பருடைய போனில் இருக்கும் File-களை உங்களது போனில் இருந்து Access செய்வது எப்படி?

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்கள் தான் எமது முதலாவது நண்பன் என்று கூறும் அளவுக்கு ஸ்மார்ட் போன் பாவனையானது இன்றைய சமூகத்தில் எம்மவர்கள் மத்தியில் காணப்படுகிறது. எமது பல்வேறுவகையான வேலைகளை மிக இலகுவாக செய்து முடிக்க இந்த ஸ்மார்ட் போன்கள் பெரிதும் உதவுகிறது.

எமக்கு வரும் மின்னஞ்சல்களை பார்த்து கொள்வது முதல் பங்கு சந்தை நிலவரங்களை தெரிந்து கொள்வது வரை என்று இந்த ஸ்மார்ட் போன்கள் எமக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது.

இதனால் இன்றைய பதில் எமது ஸ்மார்ட் போன்களோடு தொடர்புபட்ட ஒரு தகவலை வழங்கலாம் என்று நினைக்கின்றேன்.

ஸ்மார்ட் போன் வைத்து இருக்கும் நாங்கள், சில வேலை அதில் இருக்கும் ஏதேனும் ஒரு வசதியை செயற்படுத்த தெரியாமல் தடுமாறுவோம். இதை எப்படி என்று தெரிந்து கொள்வதற்காக எமது நண்பர்களும் குறிப்பிட்ட அந்த வசதியை எப்படி செயற்படுத்தி கொள்வது என்று தொலைபேசி அழைப்பு மூலம் கேட்டு செய்து கொள்வோம். சில நேரம் அவர்கள் கூறுவதை சரியாக புரிந்து கொண்டு எமது ஸ்மார்ட் போனில் செய்து முடிக்க முடியாமல் போகலாம். இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட அந்த நண்பரே பக்கத்தில் இருந்து எமது தேவையை ஸ்மார்ட் போனில் செய்து தந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.


அதே போல் உங்களது நண்பர் ஒருவரில் ஸ்மார்ட் போனில் இருக்கும் ஏதேனும் குறிப்பிட்ட ஒரு File உங்களுக்கு  தேவைப்படலாம். அப்படியான சமயத்தில் அந்த குறிப்பிட்ட File-ஐ நீங்கள் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு வழியில் தான் பெற்றுக்கொள்ள முடியும். அப்படி இல்லாமல் நீங்களே உங்களது நண்பரின் ஸ்மார்ட் போனை அச்செஸ் செய்து குறிப்பிட்ட அந்த File-ஐ பெற்றுக்கொள்ள முடியுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

பரிந்துரைக்கப்படும் பதிவு

ஆம். உங்களது ஸ்மார்ட் போனில் இருந்து உங்களது நண்பரின் ஸ்மார்ட் போனிற்கு நுழையும் வசதியை உங்களது ஸ்மார்ட் போனில் செயற்படுத்தி கொள்ள முடியும்.

இந்த செயலியானது உங்களது நண்பரின் ஸ்மார்ட் போனை உங்களது ஸ்மார்ட் போனில் இருந்து அச்செஸ் செய்யும் அனுமதியை வழங்குகிறது.

கீழே வழங்கப்பட்டிருக்கும் இணைப்பின் மூலம் உங்களது ஸ்மார்ட் போனிட்கான செயலி மற்றும் அதன் துணை செயலி ஆகியவற்றை தரவிறக்கி கொள்ளுங்கள்.
நீங்கள் மற்றவர்களுடைய ஸ்மார்ட் போனிற்கு அச்செஸ் செய்வதற்கு செய்வதற்கான செயலி

Team Viewer Android
Team Viewer iPhone

துணை செயலி - மற்றவர்கள் உங்கள் ஸ்மார்ட் ஸ்மார்ட் போனிற்கு அச்செஸ் செய்வதற்கு.

TeamViewer QuickSupport Android
TeamViewer QuickSupport iPhone

பின்னர் Team Viewer செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் நிறுவிக்கொள்ளுங்கள்.

குறிப்பு

அதே போல் நீங்கள் அச்செஸ் செய்ய நினைக்கும் உங்களது நண்பரின் ஸ்மார்ட் போனில் துணை செயலி நிறுவப்பட்டிருத்தல் வேண்டும்.

இந்த செயலியை Android ஸ்மார்ட் போன்களில் உபயோகித்து எப்படி இன்னொருவருடைய ஸ்மார்ட் போனை அச்செஸ் செய்வது என்று பார்ப்போம்.

உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவிய செயலியை ஆரம்பியுங்கள்.


அடுத்து நீங்கள் அச்செஸ் செய்ய நினைக்கும் உங்கள் நண்பரின் ஸ்மார்ட் போனில் நிறுவப்பட்ட துணை செயலியில் காணப்படும் Your ID என்பதில் இருக்கும் இலக்கத்தை உங்கள் நண்பரிடம் கேட்டு வாங்கி உங்களது ஸ்மார்ட் போனில் TeamViewer ID என்று காணப்படும் இடத்தில் டைப் செய்து Remote Control என்பதை கிளிக் செய்யுங்கள்.


அவ்வளவு தான். ஒரு சில நொடிகளில் உங்களால் உங்களது நண்பரின் ஸ்மார்ட் போனிற்கு அச்செஸ் செய்து விட முடியும்.

இப்போது உங்கள் நண்பருக்கு அவரின் ஸ்மார்ட் போனில் இருக்கும் ஏதேனும் ஒரு வசதியை செயற்படுத்த தெரியவில்லை என்றால், இந்த செயலி மூலம் நீங்கள் அவரின் ஸ்மார்ட் போனிற்கு அச்செஸ் செய்து அவருக்கு உதவ முடியும்.

அது மட்டுமில்லாமல் இந்த செயலி மூலம் உங்களது ஸ்மார்ட் போனிட்கும் உங்களது நண்பரது ஸ்மார்ட் போனிட்கும் இடையே File-களை பகிந்து கொள்ள முடியும்.

குறிப்பு

இந்த வசதிகளை பெற்றுக்கொள்ள உங்களதும் உங்களுடைய நண்பரினதும் ஸ்மார்ட் போனில் இன்டர்நெட் வசதி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட் போனிற்கு தெரியாத இலக்கத்தில் இருந்து வரும் அழைப்பு யாருடையது என்று அந்த நொடியே தெரிந்து கொள்வது எப்படி?

இன்று ஸ்மார்ட் போன்களின் பயன்பாடானது உட்சத்தை தொட்டு இருக்கும் நிலையில் நம்முடைய பெரும்பாலான வேலைகளை ஸ்மார்ட் போன் மூலமாகவே செய்து முடிக்க கூடியதாய் உள்ளது.

சில வருடங்களுக்கு முன், புகைப்படம் எடுப்பதற்கு ஒரு சாதனமும், வீடியோ எடுக்க வேறொரு சாதனமும் இணையத்தை அணுக மற்றுமொரு சாதனமும் என்று இருந்தது. ஆனால் இன்று இவை அனைத்தையும் ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் செய்து முடித்து விடலாம் என்றாகிவிட்டது.

அதனால் இன்றைய பதிவில் உங்களது ஸ்மார்ட் போனுடன் தொடர்புடைய ஒரு விடயத்தை பகிரலாம் என்று நினைக்கின்றேன்.

கையடக்க தொலைபேசி உபயோகிக்கும் அனைவருக்குமே இருக்கும் பொதுவான ஒரு பிரச்சினை தான் தேவையில்லாத அழைப்புக்கள் அடிக்கடி வருவது.


சில சமயம் தொலைபேசிகள் தொல்லை பேசிகள் என்று நினைக்கும் அளவிற்கு இந்த தேவையில்லா அழைப்புக்களின் தொல்லை இருக்கும்.

இவ்வாறு தெரியாத இலக்கத்தில் இருந்து வரும் அழைப்புக்கள் யாருடையது என்பதை கண்டறியும் வசதி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..

ஆம் நண்பர்களே.. இது முடியும். உங்களது ஸ்மார்ட் போனிற்கு வரும் அழைப்புக்களில் தெரியாத இலக்கத்தில் இருந்து வரும் அழைப்புக்கள் யாருடையது என்பதை சரியாக பிடித்துக்கொள்ள உதவுகிறது Truecaller எனும் சிறப்பு செயலி.

இந்த செயலி எவ்வாறு செயற்படுகிறது?

பரிந்துரைக்கப்படும் பதிவு

குறிப்பிட்ட இந்த செயலியை ஒருவர் தனது ஸ்மார்ட் போனில் நிறுவும் போது, அவருடைய காண்டக்ட் லிஸ்ட்டில் இருக்கும் அனைத்து இலக்கங்களும் Truecaller தரவு சேமிக்கும் தளத்தில் பதிவேட்கப்படுகிறது.

Truecaller செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

iPhone-க்காண செயலியை இங்கே சென்று பெற்றுக்கொள்ளுங்கள்.
Android-க்காண செயலியை இங்கே சென்று பெற்றுக்கொள்ளுங்கள்.
Windows Phone-க்காண செயலியை இங்கே சென்று பெற்றுக்கொள்ளுங்கள்.
Nokia-க்காண செயலியை இங்கே சென்று பெற்றுக்கொள்ளுங்கள்.

தரவிறக்கிய செயலியை உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவி கொள்ளுங்கள்.
இவ்வாறு Truecaller தளத்தில் குறிப்பிட்ட இலக்கம் சேமிக்கப்பட்டு இருக்குமாயின், அந்த இலக்கத்தில் இருந்து அழைப்பொன்று உங்களது போனிற்கு வரும் போது, சரியாக யாருடைய அழைப்பு இது என்ற விபரங்களை Truecaller உங்களுக்கு வழங்குகிறது.


பல மில்லியன் பயனர்களை கொண்டுள்ள Truecaller செயலி பொதுவாக 90% ஆனா தெரியாத இலக்கத்தில் இருந்து வரும் அழைப்புக்களை சரியாக இனம் கண்டு கொள்ள உதவுகிறது.


அது மட்டுமல்லாது உங்களுக்கு வரும் தேவையில்லாத அழைப்புக்களை Block செய்யவும் இந்த செயலி உதவுகிறது.


அத்தோடு உங்களுக்கு வரும் அழைப்பானது ஏற்கனவே பலருக்கு வந்து அவர்கள் அந்த அழைப்பை Block செய்து இருந்தால், அதையும் உங்களுக்கு காட்டுகிறது இந்த Truecaller செயலி.


ஏற்கனவே தெரியாத ஏதேனும் ஒரு இலக்கத்தில் இருந்து உள்வந்த அழைப்பின் இலக்கத்தை சரியாக குறித்து வைத்து கொண்டு Truecaller செயலிக்கு சென்று தேடிப்பார்க்கவும் முடியும்.

குறிப்பு 

குறிப்பிட்ட ஒரு தெரியாத இலக்கத்தில் இருந்து அழைப்பொன்று உங்கள் ஸ்மார்ட் போனிற்கு வருமேயானால், அந்த சமயம் உங்களது ஸ்மார்ட் போனில் இன்டர்நெட் வசதி On செய்து இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்ச்சத்திலேயே Truecaller செயலியால் உள்வரும் அழைப்பை சரியாக இனம் கண்டு கொள்ள முடியும்.

WhatsApp-ல் வித்தியாசமான எழுத்துக்களை பயன்படுத்தி ஸ்டைலான Message-களை அனுப்புவது எப்படி?

ஸ்மார்ட் போன்களில் இருந்து எமது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு குறும் செய்தி அனுப்ப பெரும்பாலும் நாம் WhatsApp-ஐ பயன்படுத்துகிறோம். நம் அனைவருக்குமே தெரியும் WhatsApp-ன் சிறப்பம்சங்கள். தமது பயனர்களுக்காக WhatsApp ஆனது பல்வேறு வசதிகளை தினம் தோறும் தந்து கொண்டு இருக்கிறது.

ஸ்மார்ட் போனை நாம் கையில் எடுத்தால் WhatsApp-ல் நாம் செலவிடும் நேரமே அதிகம் என்று சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு இந்த WhatsApp ஆனது நம் அனைவரையும் தன்பக்கம் கவர்ந்திளுத்துள்ளது. அதனால் இன்றைய பதிவில் WhatsApp உடன் சம்மந்தப்பட்ட ஒரு உபாயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.



பரிந்துரைப்க்கப்படும் பதிவு



WhatsApp-ல் எமது அன்புக்குரியவருடன் நாம் Chat செய்யும் போது Smiley-களை அனுப்புவதற்கான வசதியை WhatsApp ஏற்கனவே நமக்கு தந்துள்ளது.
இதற்கு ஒரு படி மேலே சென்று அழகான, வித்தியாசமான Font-களை WhatsApp மூலம் உங்களது நண்பர்களோடு எப்படி பகிர்ந்து கொள்வது என்று இன்றைய பதிவில் பார்ப்போம்.

இந்த வசதிகளை பெற்றுக்கொள்ள Android மற்றும் iPhone-களுக்கான சில துணை செயலிகள் நமக்கு உதவுகிறது.

நீங்கள் Android பாவனையாளர் எனில் இந்த லின்க்கில் சென்று கூல் பொண்ட் செயலியை தரவிறக்கி கொள்ளுங்கள்.

நீங்கள் iPhone பாவனையாளர் எனில் இந்த லின்க்கில் சென்று கூல் பொண்ட் செயலியை தரவிறக்கி கொள்ளுங்கள்.

இந்த செயலியை உபயோகித்து எப்படி உங்களது நண்பர்களுக்கு WhatsApp மூலம் வித்தியாசமான குறும் செய்திகளை அனுப்பது என்று பார்ப்போம்.
நிறுவிய செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் ஆரம்பியுங்கள்.
அதிலே, உங்களுக்கு தேவையான செய்தியை டைப் செய்யுங்கள்.


டைப் செய்யும் போது உங்களுக்கு தேவையான பொண்ட்-களையும் ஸ்டைல்களையும் தெரிவு செய்து கொள்ள முடியும்.



அடுத்து WhatsApp ஐகான்-ஐ கிளிக் செய்தால் உங்களது WhatsApp கணக்கு திறக்கப்படும்.


இப்போது உங்களது அன்புக்குரியவரின் இலக்கத்தை தெரிவு செய்து நீங்கள் அழகாக டைப் செய்த குறும் செய்தியை அனுப்பலாம்.

இந்த வசதியை பயன்படுத்தி உங்களது அன்புக்குரியவர்களுக்கான விசேட செய்திகளை அழகான முறையில் அனுப்பலாம். அதாவது அவர்களுடைய பிறந்தநாள் அன்றோ அல்லது வேறு எதாவது சிறப்பு நாட்களில் இவ்வாறு அழகிய முறையில் செய்திகளை அனுப்பி அவர்களை ஆச்சிரியப்படுத்தலாம்.

அதிவேக DNS மற்றும் IPv6 மூலம் இன்டர்நெட் வேகத்தை அதிகரிப்பது எப்படி?

சிறிது நாட்களுக்கு முன்னர் கூகுளின் அதிவேக DNS மூலம் எப்படி எமது இன்டர்நெட் வேகத்தை இலவசமாக அதிகரித்து கொள்வது என்று கூறியிருந்தேன். இன்றைய பதிவில் அதனோடு சம்மந்தப்பட்ட மற்றுமொரு உபாயத்தை உங்களுக்கு விளக்கப்படுத்தலாம் என்று நினைக்கின்றேன்.

அதாவது நீங்கள் இன்டர்நெட் உபயோகிக்கும் போது சாதாரண DNS-க்கு பதிலாக கூகுளின் இலவச DNS-ஐ உபயோகிக்கும் பட்ச்சத்தில் உங்களது இணைய வேகத்தை எந்த வித மென்பொருளும் இல்லாமல் அதிகரித்து கொள்ளலாம்.

கூகுளின் அதிவேக DNS மூலம் இணைய வேகத்தை எப்படி அதிகரித்து கொள்வது என்ற பதிவை கீழே வழங்கப்பட்டு இருக்கும் லின்க்கின் மூலம் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

கூகுளின் அதிவேக DNS மூலம் கணணியின் இன்டர்நெட் வேகத்தை அதிகரிப்பது எப்படி?


அந்த பதிவின் சுருக்கத்தை கீழே தந்துள்ளேன். அதாவது,

உங்களது கணணி குறிப்பிட்ட ஒரு இணைய இணைப்பு ஒன்றுடன் இணைந்து இருக்கும் போது சாதாரண DNS-கு பதிலாக Google-லின் மிக வேகமாக இயங்க கூடிய DNS-ஐ உபயோகிக்கும் பட்ச்சத்தில் உங்களது இணைய வேகமானது எந்த வித மென்பொருளும் இன்றி இன்னும் அதிகரிக்கப்படும்.

நீங்கள் குறிப்பிட்ட ஒரு இன்டர்நெட் நெட்வொர்க் உடன் இணையும் போது, உங்களது கணணி ஆனது, அந்த குறிப்பிட்ட நெட்வொர்க் உடைய DNS-ஐயே பெற்றுக்கொள்ளும். அனால் இதை நீங்கள் மாற்றி, Google-இன் அதிவேக DNS-ஐ உபயோகிக்கும் போது உங்கள் இணைய வேகமானது இருந்ததிலும் பார்க்க வேகமாக்கப்படும்.

சரி.. இன்றைய பதிவில் ஒரு படி மேலே சென்று கூகுளின் அதிவேக DNS மற்றும் IPv6-ஐ பயன்படுத்தி உங்களது இன்டர்நெட் வேகத்தை எப்படி அதிகரித்து கொள்வது என்று கூறுகிறேன்.

கூகுளின் அதிவேக DNS + IPv6 மூலம் கணனியின் இன்டர்நெட் வேகத்தை அதிகரிப்பது எப்படி?

பரிந்துரைக்கப்படும் பதிவு



படிமுறை - 1
உங்கள் கணனியில் Start-ஐ கிளிக் செய்யுங்கள்.
பின் Control Panel, அங்கே Network and Sharing Center என்பதில் கிளிக் செய்யுங்கள்.


அடுத்து Local Area Connection என்பதை கிளிக் செய்யுங்கள்.


படிமுறை - 2
அடுத்து Properties என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து  கீழே காட்டியிருப்பது போல் IPv4 என்பதை Double Click செய்யுங்கள்.


அடுத்ததாக என்று காணப்படும் இடத்தில்,
Use Following DNS என்பதை தெரிவு செய்யுங்கள்.

அதன் பின்னர் நான் கீழே படத்தில் காட்டியுள்ளவாறு 
8.8.8.8
8.8.4.4 
என்று வழங்கி OK என்பதை கிளிக் செய்யுங்கள்.


மறுபடியும் நான் மேலே குறிப்பிட்டுள்ளவாறு படிமுறை 1 மற்றும் 2-ஐ செய்து 
கீழே காட்டியிருப்பது போல் IPv6 என்பதை Double Click செய்யுங்கள்.


அடுத்ததாக Use Following DNS என்பதை தெரிவு செய்து நான் கீழே படத்தில் காட்டியுள்ளவாறு, 
2620:0:ccc::2
2620:0:ccd::2
என்று வழங்கி OK என்பதை கிளிக் செய்யுங்கள்.


இப்போது உங்களது இணைய இணைப்பானது, சேவை வழங்குனரின் DNS அல்லாது கூகுளின் அதிவேக DNS மற்றும் IPv6 முகவரிக்கு மாற்றப்பட்டு விட்டது. உங்களது கணணியை ஒரு முறை Restart செய்து விட்டு மறுபடியும் இன்டர்நெட் உபயோகிக்க தொடங்குங்கள். 

இப்போது இணையத்தை உபயோகிக்கும் போது இணைய வேகமானது முன்னரிலும் பார்க்க அதிகரிப்பப்பட்டிருப்பது உங்களுக்கே புரியும்.

Kategori

Kategori