இப்போதைக்கு 17 கேம்ஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் பல கேம்ஸ்-களை எதிர்காலத்தில் வெளியிடுவார்கள் என நம்பப்படுகிறது.
நாம் செட் செய்ய மட்டும் பாவித்த இந்த மெசெஞ்சர்-இல் இப்போது பல உடனடி விளையாட்டுக்களை சேர்த்துள்ளார்கள். நாம் ஒருவருடன் செட் செய்து சலிக்கும் போது ஒரு மாற்றமாக அவர்களுன் இந்த கேம்ஸ்களை செலேஞ் செய்துவிளையாடும் வாய்ப்பு உள்ளது.
பேஸ்புக் மெசெஞ்சர்-இல் புதிதாக வந்த இன்ஸ்டன்ட் கேம்ஸ்களை எப்படி எடுப்பது?
முதலில் உங்கள் மெசெஞ்சர்-ஐ ஓபன் செய்து.. குறிப்பிட்ட ஒரு நபரை தேர்வுசெய்து.. அதில் கீழே காட்டியுள்ளவாறு கேம் குறியீட்டை கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்து, பல கேம்ஸ்கள் காண்பிக்கப்படும். கீழே காட்டியுள்ளவாறு..
அதில் ஒன்றை தெரிவு செய்து உங்கள் நண்பர்களுடன் சலேஞ் செய்து விளையாடலாம்.
நாம் பேஸ்புக்-இல் அரட்டை அடிக்கும்போது, ஒரு சலிப்புத்தன்மை ஏற்படும் போது இவ்வாறான கேம்ஸ்களை விளையாடி அதை குறைத்துக்கொள்ளலாம்.
அவ்வளவு தான்! மேலே குறிப்பிட்டவாறு செய்தால் உங்கள் பேஸ்புக் நண்பர்களுடன் மெசெஞ்சர்-இல் கேம்ஸ்கள் விளையாடலாம்.



