கடவுச்சொல்லை வைத்து உங்கள் பென் டிரைவ்-ஐ பாதுகாப்பது எப்படி?

நாம் இன்று கடவுச்சொல் ஒன்றின் மூலம் நாம் அன்றாடம் பாவிக்கும் எமது USB பேன்டிரைவ்-ஐ எப்படி பாதுகாப்பது என்று பார்ப்போம்.

நாம் தரவுகளை பரிமாறுவதற்கு பயன்பபுத்தும் ஒரு சாதனமாக இந்த USB பெண் டிரைவ்-ஐ நாம் பாவிக்கிறோம். தரவுகளை பரிமாறும் சாதனங்களில் மிகவும் இலகுவாகவும் அவசரமாகவும் தரவுகளை பரிமாறுவதற்கு  உதவும் ஒரே சாதனம் இந்த பென் டிரைவ் தான். இது மிகவும் சிறியதாக காணப்படுவதால் காணாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம். நமது முக்கியமான தரவுகள் எமது பென் டிரைவில் இருக்கும் நேரங்கள் உண்டு, இவ்வாறான சந்தர்ப்பத்தில் எமது தரவுகளை ஒரு கடவுச்சொல்லின் மூலம் பாதுகாற்றுக்கொள்ளலாம். இதை ஒரு சாப்ட்வேயார்-இன் மூலம் எவ்வாறு செய்து கொள்வது என்பதை கீழுள்ள இலகுவான வழிமுறைகளை பின்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

கடவுச்சொல்லை வைத்து உங்கள் பென் டிரைவ்-ஐ எப்படி பாதுகாப்பது? 

முதலில் இங்கே கிளிக் செய்து இதற்கு தேவையான மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


Protect USB Pendrive With Password


டவுன்லோட்செய்த மென்பொருளை இன்ஸ்டால் செய்துவிட்டு அதை ஓபன் செய்து உங்கள் பென் டிரைவ்-ஐ உங்கள் கணனிக்கு கனெக்ட் செய்யுங்கள்.

அடுத்து, USB டிரைவ் என்று இருக்கும் இடத்தில் உங்கள் பென் டிரைவை  தெரிவு செய்து அதை முழுமையாக  பாதுகாக்கும் படி செய்துவிட்டு இன்ஸ்டால் பட்டனை அழுத்தவும்.


Protect USB Pendrive With Password

இப்போது உங்களுக்கு விரும்பிய யூசர் நேம்-ஐயும் கடவுச்சொல் ஒன்றையும் டைப் செய்து OK செய்யவும்,

Protect USB Pendrive With Password

அவ்வளவு தான். இப்போது உங்கள் பென்டிரைவ் ஒரு கடவுச்சொல் உடன்       பாதுகாப்பாக இருக்கும். உங்கள் தரவுகளை பார்க்கக்கூடாதவர்கள் பார்ப்பதை விட்டும் பாதுகாற்றுக்கொள்ளலாம்.