எமது ஒரு நண்பனுக்கு அல்லது ஒரு நபருக்கு அவர்களின் கணனியில் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புக்கள் உண்டு. அவ்வாறான சந்தர்ப்பத்தில் சிலருக்கு நாம் அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு படிமுறைகளாக சொன்னால் அவர்களுக்கு அதை தீர்த்துக்கொள்ள முடியாமல் சிரமப்படும் வாய்ப்புகள் உண்டு. அவ்வாறான சந்தர்ப்பங்களில் எமது ஆண்டிராய்ட் டச் போனில்-இருந்து அவர்களுக்கு உதவும் ஒரு வாய்ப்பு உண்டு. அது எவ்வாறு என்று பார்ப்போம்.
உங்கள் ஆண்டிராய்ட் சாதனத்திலிருந்து கணணி ஒன்றை எப்படி கட்டுப்படுத்துவது?
முதலில் இங்கே கிளிக் செய்து இதற்கு தேவையான மென்பொருளை உங்களது போன்-இற்கு தரவிறக்கிக்கொள்ள வேண்டும்.
அடுத்து அதே மென்பொருளை கட்டுப்படுத்த வேண்டிய கணணியிலும் தரவிறக்கிக்கொள்ள வேண்டும். அதை இங்கே கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
அடுத்து டவுன்லோட் செய்த மென்பொருளை ஓபன் செய்ய வேண்டும்.
இப்போது உங்கள் ஆண்டிராய்ட் சாதனத்தில் உங்களுக்கு கட்டுபடுத்த வேண்டிய கணனியின் ID-ஐ டைப் செய்ய வேண்டும்.
அத்துடன் கடவுச்சொல் ஒன்றை கேற்கும். அதற்கு கணனியில் காட்டும் கடவுச்சொல்-ஐ டைப் செய்ய வேண்டும்.
அடுத்து கணனியில் மவ்ஸ்-ஐ எப்படி கட்டுப்படுத்துவது என சில வழிமுறைகள் காண்பிக்கப்படும்.
அவ்வளவு தான். இப்போது உங்களால் அந்த குறிப்பிட்ட கணணியை உங்கள் போன்-ஐ பயன்படுத்தி கட்டுப்படுத்திக்கொள்ளலாம்..
