ஸ்கைப் கணக்கு ஒன்று இல்லாமல் ஸ்கைப்பை பயன்படுத்துவது எப்படி என்பதை கீழுள்ள இலகுவான வழிமுறைகளை பின்பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
ஸ்கைப் கணக்கு ஒன்று இல்லாமல் ஸ்கைப்பை பயன்படுத்துவது எப்படி?
முதலில் Skype.com இற்கு சென்று Start a Conversation என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்து வரும் ஸ்கிரீனில் உங்களது பெயரை டைப் செய்து Start a Conversation என்பதை கிளிக் செய்யவும்.
அத்துடன் உங்களால் ஸ்கைப் கணக்கு இல்லாமல் ஸ்கைப்பை பயன்படுத்த முடியும். இதில் மற்றவர்களை சேர்த்துகொள்வதற்கு இதில் தரப்படும் லிங்க்-ஐ உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி அவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆனால் இதில் எமது அழைப்பிக்களின் ரெகார்ட் 24 மணித்தியாலத்தில் இல்லாமல் போய் விடும்.
மேலுள்ள இந்த இலகுவான வழிமுறைகளை பின்பற்றி ஸ்கைப் கணக்கு இல்லாமல் ஸ்கைப்-ஐ எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்து செயற்படுத்தலாம்.




