வீடியோ ஒன்றை ஆடியோ ஆக கன்வெர்ட் செய்வது எப்படி? (ஆன்ராயிடு)

ஆன்ராயிடு ஸ்மார்ட் போனுக்கான ஆடியோ மற்றும் வீடியோ கன்வர்ட்டர் செயலிகள் பற்றி எமது தளத்தில் ஒரு சில பதிவுகள் எழுதப்பட்டு இருந்தன. அதாவது அனைத்து வீடியோ போர்மட்-களும் எல்லாருடைய ஸ்மார்ட் போனிலும் ஒரே மாதிரியாக வேலை செய்யாது. ஒரு சில ஸ்மார்ட் போன்களில் MP4 அல்லது AVI போன்ற போர்மட்-களை கொண்ட வீடியோ மட்டுமே வேலை செய்யும்.

ஆகவே உங்களுடைய போனில் மேலே குறிப்பிட்ட போர்மட்-கள் தவிர வேறு ஏதேனும் ஒரு போர்மட்-இல் வீடியோ ஒரு இருக்குமேயானால் உங்களுக்கு பிடித்த வீடியோவை போனில் இருந்தபடியே பார்க்க முடியாமல் போகிறது.


அதனால் உங்களுடைய, வீடியோ பைல் ஒன்றை ஆடியோ ஆக,வீடியோ பைல் ஒன்றில் இருக்கும் போர்மட்-ஐ வேறு ஒரு போர்மட்-இற்கு மாற்ற என்று பல்வேறு பயனுள்ள வசதிகளை தரும் ஆன்ராயிடு கன்வர்டர் செயலியை கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ள முடியும்.

ஆன்ராயிடு போனில் இருந்து வீடியோ மற்றும் ஆடியோ-களை கன்வர்ட் செய்வது எப்படி?

ஆனால் இன்றைய பதிவில் ஆன்ராயிடு ஸ்மார்ட் போனில் காணப்படும் வீடியோக்களை ஆடியோ ஆக கன்வெர்ட் செய்யும் செயலி ஒன்றை அறிமுகப்படுத்துகிறேன்.

ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் ஒரு சிலருக்கு தமது போனில் இருக்கும் வீடியோக்களை ஆடியோ வடிவில் சேமித்து கொள்ள வேண்டும் என்ற தேவை இருக்கும். ஆகவே இவ்வாறான தேவையை மிக இலகுவாக பூர்த்தி செய்து கொள்ள உதவும் ஆடியோ கன்வர்ட்டர் பற்றி பார்ப்போம்.

வீடியோக்களை ஆடியோ ஆக கன்வெர்ட் செய்வது எப்படி?

முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் ஆன்ராயிடு கன்வர்ட்டர்-ஐ உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து உங்களுக்கு தேவையான வீடியோ ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்கள்.


இப்போது பிக்க இலகுவாக குறித்த வீடியோவை ஆடியோ ஆக கன்வெர்ட் செய்வதட்கான வசதி கிடைக்கும். மேலும் இந்த செயலியின் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்றால் அங்கே குறித்த ஆடியோ பைல்-ஐ ரின்டோன் ஆக வைப்பதட்கு, உங்களுடைய மெமரி கார்ட்-இல் சேமிப்பதட்கு என்று பல்வேறு வசதிகள் காணப்படுகின்றன.


ஆகவே மிக இலகுவாக உங்களுக்கு தேவையான வீடியோ ஒன்றை ஆடியோ ஆக கன்வெர்ட் செய்ய உதவும் கன்வர்ட்டர் செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக தரவிறக்க முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பில் அதிகளவான விளம்பரங்கள் காணப்படுகின்றன. அதனால் இந்த செயலியின் விளம்பரம் நீக்கப்பட்ட பதிப்பை கீலே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது போனுக்கு பெற முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 72' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.