ஆன்ராயிடு போனுக்கு ப்ரிஸ்மா போட்டோ எடிட்டிங் செயலி அறிமுகம்

அண்மைய நாட்களில் ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமாக பேசப்பட்டு வந்த இரண்டு விடயங்களாக ப்ரிஸ்மா அப்ஸ் மற்றும் போகிமோன் கேம் என்பவற்றை குறிப்பிடலாம். ஆன்ராயிடு மற்றும் ஐபோன் பாவனையாளர்களை மிகவும் கவர்ந்த இந்த இரண்டு செயலிகளும் கடந்த ஒரு சில நாட்களில் பல லட்சம் தடவைகள் ஸ்மார்ட் போன் பாவனையாளர்களால் டவுன்லோடு செய்யப்பட்டு இருந்தன.

அந்த வகையில் போகிமோன் கேம்-ஐ இலங்கை மற்றும் இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் டவுன்லோடு செய்து விளையாடுவது எப்படி என்றும் அதே போல போகிமோன் கேம்-ஐ ஹேக் செய்து இருந்த இடத்தில் இருந்தபடியே விளையாடுவது எப்படி என்றும் எமது தளத்தில் ஏற்கனவே பதிவொன்று எழுதப்பட்டு இருந்தது. அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீலே தரப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

போகிமோன் கேம்-ஐ இந்தியா இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் டவுன்லோடு செய்வது எப்படி?


அதே போல, ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் பிரபல்யமாக பேசப்படும் அடுத்த விடயம், பிரிஸ்மா அப்ஸ். அதாவது எங்களுடைய போட்டோகளை அழகிய ஓவியம் போல மாற்றும் வல்லமை கொண்ட இந்த செயலி இப்போதுவரை ஐபோன் பாவனையாளர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டு உள்ளது.

ஆனால் இந்த ப்ரிஸ்மா செயலி முதலில் ஐபோன் பாவனையாளர்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. நாம்  பேஸ்புக் அல்லது வேறு ஏதேனும் சமூக வலைத்தளங்களை லொகின் செய்து பார்த்தால் பெரும்பாலான ஐபோன் பாவனையாளர்கள் ப்ரிஸ்மா செயலி மூலம் தமது போட்டோகளை அழகிய ஓவியம் போன்று எடிட் செய்து இருந்தார்கள்.

ஆகவே ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்கள் மத்தியில் இந்த ப்ரிஸ்மா செயலி தமது போனுக்கு இல்லை என்ற குறை காணப்பட்டு வந்தது. அந்த குறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்-களுக்கும் ப்ரிஸ்மா செயலி அறிமுகமாகி உள்ளது.

ஆன்ராயிடு போனில் பிரிஸ்மா எபெக்ட் பெறுவது எப்படி?

முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் பிரிஸ்மா எபெக்ட் தரக்கூடிய ஆன்ராயிடு செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை ஆரம்பித்து உங்கள்து போனில் இருக்கும் ஏதேனும் ஒரு போட்டோவை தெரிவு செய்யுங்கள்.


அடுத்து உங்களுக்கு தேவையான ப்ரீஸ்மா எபெக்ட்-ஐ வழங்கி குறித்த போட்டோவை சேமித்து கொள்ள முடியும்.

இந்த சூப்பரான செயலி கூகுள் ப்லே ஸ்டோரிட்கு அப்லோட் செய்யப்படவில்லை என்பதும் இந்த செயலியின் பேட்டா பதிப்பே இப்போது வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே உங்களது போட்டோவுக்கு அழகிய ஓவிய எபெக்ட் தரக்கூடிய இந்த ப்ரீஸ்மா செயலியின் பேட்டா பதிப்பை கீலே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது ஆன்ராயிடு போனுக்கு பெற முடியும்.

எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 80' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.