பல்வேறு வசதிகளுடன் வாட்ஸ்அப் ஜிமோட்-இன் புதிய பதிப்பு

வாட்ஸ்அப்-ஐ பல்வேறு மூன்றாம் தர நிறுவனங்கள் சிறிது மெறுகேற்றி அதிகாரபூர்வ வாட்ஸ்அப் தரும் வசதிகளை விட அதிக வசதிகளுடன் வெளியிடுவது வழக்கம். இது பெரும்பாலும் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்-களுக்கே பொருந்தும். ஜீ-மோட் வாட்ஸ்அப், வாட்ஸ்அப் ப்ளஸ் என்று பல்வேறு பெயர்களுடன் வாட்ஸ்அப் ஒரு சில புது வசதிகளுடன் வெளிவந்து கொண்டு இருக்கிறது.


இன்றும் அவ்வாறான ஒரு வாட்ஸ்அப் பதிப்பையே உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். வாட்ஸ்அப் ப்ளஸ் ஜிமோட் என அழைக்கப்படும் இந்த வாட்ஸ்அப் பதிப்பு ஆன்ராயிடு ஸ்மார்ட் போன்களுக்கு வெளியாகி உள்ளது. பல்வேறு வசதிகளை கொண்ட இந்த வாட்ஸ்அப்-இல் இருக்கும் சில முக்கியமான வசதிகளை கீழே பட்டியலிட்டுள்ளேன்.

அழகிய வாட்ஸ்அப் தீம்கள்
ஒரிஜினல் போட்டோ-களை தரம் குறையாமல் அனுப்பும் வசதி
வாட்ஸ்அப்-ஐ லாக் செய்யும் வசதி
30MB அளவான பைல்-களை அனுப்பும் வசதி
90 போட்டோ-களை ஒரே நேரத்தில் அனுப்பும் வசதி
இத்துடன் மேலும் பல வசதிகள் உண்டு.

ப்ரைவசி பக்கம் சென்று பார்த்தோமேயானால்,

ஆன்லைன் இருப்பதை மறைக்கும் வசதி
மெசேஜ் பார்த்ததாக வரும் நீல நிற டிக்-ஐ மறைக்கும் வசதி
இது போன்ற மேலும் பல்வேறு வசதிகள் இந்த வாட்ஸ்அப்-இல் காணப்படுகின்றன.

கூகுள் ப்லே ஸ்டோரிலே இந்த வாட்ஸ்அப்-ஐ டவுன்லோட் செய்ய முடியாது.

ஆகவே நாம் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி இந்த வாட்ஸ்அப்-ஐ உங்களது ஆன்ராயிடு போனுக்கு பெற்றுக்கொள்ளுங்கள்.

டவுன்லோட் லிங்க்-களை வழங்குவதற்கென சிறப்பு பேஸ்புக் பேஜ் ஒன்றை 'டெக் இன் தமிழ் - ப்ரோ' என்ற பெயரில் ஆரம்பித்துள்ளேன்.

ஆகவே இந்த பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

அடுத்து குறித்த பேஸ்புக் பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில்,

'பதிவு 112' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ளுங்கள்.

எமது பேஸ்புக் பேஜ்-ஐ லைக் செய்து உங்களது நண்பர்களுடனும் ஷேர் செய்து கொள்ள மறக்க வேண்டாம்.