எமது தளத்தில் ஏற்கனவே உங்களது ஆன்ராயிடு போனில் இருக்கும் போட்டோகளை எந்த விதமான செயலிகளையும் பயன்படுத்தாமல் அனிமேஷன் போட்டோ ஆக மாற்றி உங்களது பேஸ்புக் கணக்கில் பதிவேற்றுவது எப்படி என்ற பதிவொன்றை எழுதி இருந்தேன். அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீலே தரப்பட்டிருக்கும் லிங்க்கை கிளிக் செய்து வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
உங்களது போட்டோகளை அனிமேஷன் ஆக மாற்றி பேஸ்புக்-இல் ஷேர் செய்வது எப்படி?
ஆகவே மேலே உள்ள பதிவின் மூலம் உங்களது அழகிய போட்டோகளை அனிமேஷன் ஆக மாற்றிக்கொள்வது எப்படி என்று தெரிந்து கொண்டீர்கள்.
பேஸ்புக் பயனர்கள் மத்தியில் பலத்த வரவேட்பை பெற்ற இந்த அனிமேஷன் போட்டோகள் தினம்தோறும் லட்சக்கணக்கில் பேஸ்புக்-இல் பதிவேற்றப்படுவது நாம் யாவரும் தினமும் பார்க்கும் ஒரு விடயமாகி விட்டது. ஆனால் இப்போது பேஸ்புக்-இல் போட்டோ அனிமேஷன்-களை விட வீடியோக்களை அனிமேஷன் ஆக மாற்றி பகிர்வது ட்ரெண்ட் ஆகி விட்டது.
ஆகவே இன்றைய பதிவிலே எமது போனில் இருக்கும் வீடியோக்களை அழகிய அனிமேஷன் போட்டோ ஆக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.
வீடியோக்களை அனிமேஷன் போட்டோ ஆக மாற்றுவது எப்படி?
முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் அனிமேஷன் செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை ஆரம்பித்து அதிலே வீடியோ என்பதை தெரிவு செய்யுங்கள்.
அடுத்து இந்த செயலியை ஆரம்பித்து அதிலே வீடியோ என்பதை தெரிவு செய்யுங்கள்.
அடுத்து உங்களது போனில் இருக்கும் ஏதேனும் ஒரு வீடியோவை தெரிவு செய்யுங்கள்.
அடுத்து தோன்றும் திரையில் 'ஜிப்' என்பதை தெரிவு செய்வதன் மூலம் குறித்த வீடியோவை மிக இலகுவாக அனிமேஷன் போட்டோ ஆக மாற்ற முடியும். அத்துடன் அதை பேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றில் ஷேர் செய்து கொள்ளும் வசதியையும் தருகிறது இந்த அனிமேசன் செயலி.
ஆகவே மிக இலகுவாக உங்களுக்கு பிடித்த வீடியோக்களை அனிமேஷன் போட்டோ ஆக மாற்ற உதவும் இந்த ஆன்ராயிடு அனிமேஷன் செயலியை இங்கே கிளிக் செய்து கூகுள் ப்லே ஸ்டோரிலே இலவசமாக பெற முடியும். ஆனால் இந்த செயலியின் இலவச பதிப்பில் அதிகளவான விளம்பரங்கள் காணப்படுகின்றன. அதனால் இந்த செயலியின் விளம்பரம் நீக்கப்பட்ட பதிப்பை கீலே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது போனுக்கு பெற முடியும்.
எமது பேஸ்புக் பேஜ்-இற்கு இங்கே கிளிக் செய்து சென்று பேஜ்-இலே முதலாவதாக இருக்கும் பதிவில் 'பதிவு 74' என காட்டப்பட்டிருப்பதில் இருக்கும் லின்க்கை கிளிக் செய்து, இந்த செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.



